'2' வருஷமா வாய்ப்பு கொடுக்காத 'CSK' .. வந்ததும் குஜராத் அணி கொடுத்த சான்ஸ்.. தமிழக வீரரை வாழ்த்தும் ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள், ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியைத் தவிர, மற்ற அனைத்து அணிகளுக்கும் பிளே ஆப் சுற்று உள்ளதால், எப்படியாவது அடுத்த சுற்றுக்கு முன்னேற அனைத்து அணிகளும் போராடி வருகின்றனர்.
மேலும், நடப்பு தொடரில் புதிதாக களமிறங்கி இருந்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள், யாரும் எதிர்பாராத வகையில், புள்ளிப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஆதிக்கம் செலுத்தும் லக்னோ, குஜராத்
இரு அணிகளும் 16 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், ரன் ரேட் அடிப்படையில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள், புள்ளிப் பட்டியலில் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் உள்ளது. இரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றால், ஒரு வெற்றியை பெற்றாலே போதும் என கூறப்படுகிறது.
அந்த வகையில், குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள், இன்றைய (10.05.2022) லீக் போட்டியில் மோதி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, முதலாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதனால், இரு அணிகளும் தங்களின் வெற்றிக்கு வேண்டி கடுமையாக போராடி வருகிறது.
என்ட்ரி கொடுத்த தமிழக வீரர்..
இந்த போட்டியில், டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார். இந்நிலையில், குஜராத் அணிக்காக இன்று களமிறங்கி உள்ள தமிழக வீரர் குறித்து, நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டிக்காக, குஜராத் அணியில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேத்யூ வேடு, சாய் கிஷோர் மற்றும் யாஷ் தயால் உள்ளிட்ட வீரர்கள் குஜராத் அணியில் இடம்பிடித்திருந்தனர். இதில், தமிழக வீரரான சாய் கிஷோர், முதல் முறையாக இன்று ஐபிஎல் போட்டியில் களமிறங்குகிறார்.
சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர், தமிழ்நாடு அணிக்காக நிறைய உள்ளூர் போட்டிகளில் ஆடி, அணிக்காக வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார். அதே போல, TNPL தொடரிலும் ஆடி, நிறைய விக்கெட்டுகளை சாய்த்து பலரின் கவனத்தையும் பெற்றிருந்தார். இவரை கடந்த 2020 ஆம் ஆண்டு, ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்திருந்தது.
சிஎஸ்கேவில் வாய்ப்பு கிடைக்கல..
இரண்டு ஆண்டுகளாக சிஎஸ்கே அணியில் இடம்பிடித்திருத்த சாய் கிஷோருக்கு ஒரு போட்டியில் கூட ஆடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சீனியர் வீரர்கள் அதிகம் இருந்ததால், பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார். இதனையடுத்து, அணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட, நடப்பு தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 3 கோடி ரூபாய் கொடுத்து சாய் கிஷோரை ஏலத்தில் எடுத்திருந்தது. தொடர்ந்து, இன்றைய போட்டியில் அவருக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டிருந்தது.
இரண்டு ஆண்டுகளாக, ஐபிஎல் போட்டியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்ததையடுத்து, தற்போது அவர் முதல் முறையாக களமிறங்கி உள்ளதால், தன்னுடய திறனை சாய் கிஷோர் வெளிப்படுத்த வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பேட்டிங் பண்றதுக்கு முன்னாடி தோனி சொன்ன ‘ஒரு’ அட்வைஸ்.. ‘ஆட்டநாயகன்’ விருது வாங்கிய CSK வீரர் சொன்ன சீக்ரெட்..!
- “ஒரு மேட்ச்ல சரியா விளையாடலைன்னா அவரை உட்கார வச்சீங்க”.. பெரிய தப்பு செய்த CSK.. சுட்டிக்காட்டிய முன்னாள் வீரர்..!
- “பவுண்டரி அடிங்க, ஆனா இத மட்டும் பண்ணாதீங்க”.. கடைசி ஓவரில் தோனியிடம் விளையாட்டா பிராவோ வச்ச கோரிக்கை..!
- "ஸ்கூல்ல இருந்தே எனக்கு அது செட் ஆகாது" - Play off வாய்ப்பு பற்றி தோனி என்ன சொல்லிருக்காரு பாருங்க
- ‘ஓ இதுதான் காரணமா..?’ பேட்டை கடித்த தோனி.. முன்னாள் வீரர் கொடுத்த விளக்கம்..!
- "பிராவோ ஃபீல்டிங் பாத்து.." மைதானத்தில் தோனி சொன்ன வார்த்தை.. வைரலாகும் 'ஆடியோ'!!
- இனி வர்ற போட்டிகள்ல இந்த விஷயங்கள்லாம் கரெக்ட்டா நடந்தா CSK கண்டிப்பா PlayOff -க்கு உள்ள போய்டும்.. பக்காவான ஸ்கெட்ச்..!
- “அன்னைக்கு அழுதுட்டே தான் பேசுனாரு”.. வீரர்கள் முன் கண்கலங்கிய ‘தல’ தோனி.. இதுவரை யாருக்கும் தெரியாத சம்பவத்தை சொன்ன CSK பேட்டிங் கோச்..!
- “கொஞ்சம் கூட ஈகோ இல்லாம இந்த முடிவை எடுத்திருக்காரு”.. துணிச்சலாக ஜடேஜா எடுத்த முடிவுக்கு முன்னாள் வீரர் பாராட்டு..!
- “அந்த வலி என்னன்னு எனக்கு தெரியும்”.. கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஜடேஜா.. முன்னாள் CSK வீரர் உருக்கம்..!