இந்த ‘ரூல்ஸ்’ மட்டும் அப்ப இருந்திருந்தா தலைவன் ‘சச்சின்’ 1 லட்சம் ரன் அடிச்சிருப்பாரு.. புதிய கிரிக்கெட் விதிகளை கடுமையாக சாடிய அக்தர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் இந்த விதிகள் மட்டும் அப்போதே இருந்திருந்தால் சச்சின் டெண்டுல்கர் 1 லட்சம் ரன்கள் அடித்திருப்பார் என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

புதிய விதிகளை சாடிய அக்தர்

இந்திய கிரிக்கெட் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது யூடியூப் சேனலில் நேர்காணல் மேற்கொண்டார். அப்போது சர்வதேச கிரிக்கெட்டில் உள்ள விதிகள் குறித்து கடுமையாக சாடினார்.

சச்சின் 1 லட்சம் ரன் அடித்திருப்பார்

அதில், ‘இப்போதெல்லாம் சர்வதே கிரிக்கெட்டில் 2 புதிய பந்துகள் கொடுக்கப்படுகின்றன. விதிகளை கடுமையாக்க வேண்டும். அனைத்து விதிகளும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே வகுக்கப்படுகின்றன. சச்சின் டெண்டுல்கர் ஆடிய காலக்கட்டத்தில் மட்டும் 3 ரிவியூ கொடுக்கப்பட்டிருந்தால், அவர் 1 லட்சம் ரன்கள் அடித்திருப்பார்.

கடினமான பேட்ஸ்மேன்

இந்த விஷயத்தில்தான் சச்சினை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கும். ஏனென்றால், அவரது ஆரம்பகட்ட கிரிக்கெட் வாழ்க்கையில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸை எதிர்கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல ஷேன் வார்னேவுக்கு எதிராக ஆடியிருக்கிறார். பின்னர் பிரெட் லீ, அக்தரை எதிர்கொண்டிருக்கிறார். அதன்பின்னர் அடுத்த தலைமுறை இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் ஆடியிருக்கிறார். அதனால்தான் சச்சின் டெண்டுல்கரை மிகக்கடினமான பேட்ஸ்மேன் என்று கூறுகிறேன்’ என சோயிப் அக்தர் தெரிவித்தார்.

Neocov.. அதிக வீரியத்துடன் பரவக்கூடிய புதிய கொரோனா வைரஸ்... மிக ஆபத்தானது என சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

யாரும் முறியடிக்காத சாதனை

சர்வதே கிரிக்கெட்டில் பல முறை 80-90 ரன்களில் அம்பயரின் தவறான முடிவால் சச்சின் வெளியேறியுள்ளார். குறிப்பாக 99 ரன்கள் எடுத்திருந்தபோது பலமுறை இவ்வாறு ஆட்டமிழந்துள்ளார். அப்படி இருந்தும் கூட்ட சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசி வரலாறு படைத்துள்ளார். இந்த சாதனையை இதுவரை எந்தவொரு கிரிக்கெட் வீரராலும் முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த நாட்டுக்கு போனாலும் மறக்காம ‘Toilet-டை’ எடுத்துச் செல்லும் வட கொரிய அதிபர்?.. இதை தொட்டா அவ்ளோதான்.. பின்னணியில் இருக்கும் ரகசியம்..!

SACHIN, 1 LAKH RUNS, AKHTAR BASHES, CRICKET RULES, SHOAIB AKHTAR, INTERNATIONAL CRICKET, கிரிக்கெட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்