"35 வருஷத்துக்கு முன்னாடி இதே கிரவுண்ட்ல இருந்து அழுதுகிட்டே வெளியே வந்தேன்".. சச்சின் பகிர்ந்த நெகிழ்ச்சியான வீடியோ..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர் புனேவில் உள்ள மைதானத்துக்கு 35 வருடம் கழித்து மீண்டும் சென்றிருக்கிறார். மேலும், அந்த மைதானத்தில் நடந்த பழைய சம்பவம் பற்றியும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

சச்சின் டெண்டுல்கர்

ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் செய்த சாதனைகள் மகத்தானவை. இன்றும் அவற்றுள் பல முறியடிக்கப்படாமலேயே உள்ளது. இதுவே அவரது மேன்மையை வெளியுலகிற்கு இன்றும் சொல்லிவருகிறது. சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவரான சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு சுவாரஸ்ய சமபவம் பற்றியும் அவர் பேசியிருக்கிறார்.

முதல் போட்டி

புனேவில் அமைந்துள்ள PYC ஜிம்கானா மைதானத்திற்கு 35 வருடம் கழித்து சச்சின் சென்றிருக்கிறார். இங்கே தான் மும்பை அணிக்காக 1986 ஆம் ஆண்டு 15 வயதுக்கு உட்பட்டோருக்கான முதல் போட்டியில் விளையாடியதாக அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார் சச்சின். அந்த போட்டியில் நான் ஸ்ட்ரைக் எண்டில் தான் நின்றுகொண்டிருந்ததாகவும் ராகுல் கன்பூலே என்பவர் பேட்டிங் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அப்போது ராகுல் ஆஃப் டிரைவ் ஆட, 3 ரன்கள் ஓடுமாறு சச்சினிடம் சொல்லியிருக்கிறார். இதுபற்றி பேசிய சச்சின்,"ராகுல் என்னைவிட இரண்டு வயது பெரியவர். அதேபோல நன்றாகவும் ஓடக்கூடியவர். இது என்னுடைய முதல் போட்டி என்பதால் அதிக ரன்களை எடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினேன். அப்போது அழுதுகொண்டே என்னுடைய இருக்கைக்கு சென்றேன்" எனக் கூறியுள்ளார்.

இந்த வீடியோ இதுவரையில் 3 மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. அவரது ரசிகர்கள் இந்த வீடியோ பதிவில் கமெண்ட் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

 

CRICKET, SACHIN, VIDEO, கிரிக்கெட், சச்சின், வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்