"இப்படி ஒரு அனுபவம் கிடைச்சதே இல்லங்க".. மீன்பிடி படகை பார்த்ததும் ஜாலியான சச்சின் டெண்டுல்கர்.. வைரலாகும் வீடியோ..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் கோவா கடற்கரையில் மீன்பிடி படகை கரையேற்றும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

"இப்படி ஒரு அனுபவம் கிடைச்சதே இல்லங்க".. மீன்பிடி படகை பார்த்ததும் ஜாலியான சச்சின் டெண்டுல்கர்.. வைரலாகும் வீடியோ..
Advertising
>
Advertising

Also Read | Emaar Tower Fire : துபாய் புர்ஜ் கலிஃபா அருகே உள்ள 35 மாடி கட்டிடத்தில் தீ விபத்து.. பரபரப்பு வீடியோ!

சச்சின் டெண்டுல்கருக்கு எவ்வித அறிமுகமும் தேவையில்லை. கிரிக்கெட் வரலாற்றை சச்சின் பெயர் இல்லாமல் எழுதிவிட முடியாது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபிறகு, பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று வீடியோ வெளியிட்டு வருகிறார் சச்சின். அந்த வகையில் சமீபத்தில் கோவா சென்றிருக்கிறார் அவர். அங்கே, பாரம்பரிய முறையில் மீன்பிடிக்கும் சிலரை சந்தித்து பேசுகிறார். இந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சச்சின், இப்படியான அனுபவம் தனக்கு கிடைத்தது இல்லை எனவும் கூறியுள்ளார்.

Sachin Tendulkar shares video with Fishermen In Goa

அதே வீடியோவில் கோவாவின் Benaulim கடற்கரையில் நின்றிருந்த சில மீனவர்களோடு பேசுகிறார் சச்சின். அப்போது கோவாவின் பிரத்யேக உணவு வகைகளில் கடல்சார் உணவுகள் முன்னிலை வகிப்பதாக சச்சின் குறிப்பிடுகிறார். தொடர்ந்து, மீன்பிடிக்கும் நபரிடம் அதற்கான வழிமுறைகள் குறித்தும் கேட்கிறார்.

அப்போது, தங்களது குடும்பத்தினர் காலங்காலமாக பாரம்பரிய மீன்பிடி முறையை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார் அந்த மீனவர். தொடர்ந்து, மீன்பிடி படகு கடலில் இறக்கப்படுறது. அதனை ஆர்வத்தோடு பார்க்கும் சச்சின், அந்த படகு கரையேற உதவியும் செய்கிறார். கயிறை பிடித்து இழுத்தபடியே மீனவர்களோடு பேசும் சச்சின் அவர்களது பயணம் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிகிறார்.

இந்த வீடியோவில் "என்ன ஒரு அனுபவம்.. நம்பவே முடியல "எனக் குறிப்பிடும் சச்சின் "கோவாவின் மீனவர் ஒருவரோடு ஆர்வமூட்டும் ஒரு காலைப்பொழுது" என எனக் குறிப்பிட்டு இந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோவை 258,000 பேர் லைக்ஸ் செய்திருக்கின்றனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமான முறை இந்த வீடியோ பார்க்கப்பட்டிருக்கிறது.

 

Also Read | மாஸ்டடோன் தளத்துக்கு படையெடுத்த நெட்டிசன்கள்.. அப்படியென்ன ஸ்பெஷல் இருக்கு அதுல.?

SACHIN TENDULKAR, FISHERMEN, GOA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்