"டிராவிட் தான் கேப்டன், ஆனா தோனிகிட்ட தான் ஐடியா கேப்பேன்".. சச்சின் உடைத்த சீக்ரெட்.. அப்பவே அப்படியா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணி கண்ட சிறந்த கேப்டன்களில் ஒருவராக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனி. இந்திய அணியை வழிநடத்தி வந்த ராகுல் டிராவிட், கேப்டன் பதவியில் இருந்து விலகியதையடுத்து இந்திய அணியின் புதிய கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டிருந்தார்.

Advertising
>
Advertising

Also Read | முதல் டெஸ்ட் 2010-ல, 2வது 2022-ல.. 12 வருடம் கழித்து முதல் விக்கெட் எடுத்த உனத்கட்!! குவியும் வாழ்த்துக்கள்

அவரது தலைமையில், முதலாவதாக நடந்த டி 20 உலக கோப்பையை 2007 ஆம் ஆண்டு இந்திய அணி கைப்பற்றி அசத்தி இருந்தது. இதற்கு அடுத்தபடியாக, 2011 ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பையையும் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது.

அதே போல, தோனி தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் கைப்பற்றி அசத்தி இருந்தது. டி 20 உலக கோப்பை, ஒரு நாள் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் தோனி தான். 26 வயதில் இந்திய அணியின் கேப்டனான தோனி தலைமையில் பல்வேறு சாதனைகளையும் கிரிக்கெட் அணி எட்டிப் பிடித்திருந்தது.

கேப்டன் பதவியில் இருந்து விலகி கோலி தலைமையில் ஆடி வந்த தோனி, பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்தார். இதற்கடுத்து தற்போது ஐபிஎல் தொடர்களில் மட்டும் தொடர்ந்து ஆடியும் வருகிறார் தோனி. இந்த நிலையில், தோனி கேப்டன்சி திறன் குறித்து தற்போது சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ள கருத்து, அதிகம் வைரலாகி வருகிறது.

ராகுல் டிராவிட்டிற்கு பிறகு, இந்திய அணியின் கேப்டனாக தோனியை நியமிக்க அறிவுறுத்தி இருந்தவர் சச்சின் தான். Infosys சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசியுள்ள சச்சின் டெண்டுல்கர், "இங்கிலாந்தில் நாங்கள் இருந்த சமயத்தில் எனக்கு கேப்டன்ஷிப் பொறுப்பு வந்த போது நடந்த சம்பவம் இது. நமது அணியில் ஒரு சிறந்த இளம் தலைவர் இருப்பதால் அவரை பார்க்க வேண்டும் என தோனியை குறிப்பிட்டு தெரிவித்தேன். நான் அவரிடம் நிறைய பேசி உள்ளேன். முதல் ஸ்லிப்பில் நான் நிற்கும் போது தோனியிடம் நிறைய கேள்விகள் கேட்பேன்.

அப்போது டிராவிட் கேப்டனாக இருந்த போதும் நான் தோனியிடம் தான் ஆலோசனை கேட்பேன். அவர் கூறும் கருத்துக்கள், சமநிலையாகவும், அமைதியாகவும், முதிர்ச்சியாகவும் இருந்ததை நான் உணர்ந்தேன். நல்ல கேப்டன்ஷிப் என்பது எதிரணியை விட ஒரு படி மேலே இருப்பதாகும். ஒருவர் அதை சிறப்பாக செய்தால் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார் என சொல்வோம். அது உடனே நடந்து விடாது. 10 பந்துகளில் 10 விக்கெட்டுகள் எடுத்து விட முடியாது.

அதற்கு சிறந்த திட்டங்களை வகுக்க வேண்டும். போட்டியின் முடிவில் ஸ்கோர் போர்டு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த வகையில், தோனியிடம் பல குணத்தை கண்டேன்.  அதனால் தான் அவரது பெயரை பரிந்துரைத்தேன்" என தெரிவித்துள்ளார்.

Also Read | உச்சக்கட்ட வறுமை.. மகனின் ஆசிரியையிடம் 500 ரூபாய் கடன் கேட்ட தாய்.. இரண்டே நாளில் நடந்த அற்புதம்!!

CRICKET, MS DHONI, SACHIN TENDULKAR, INDIAN CAPTAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்