கோலி வழங்கிய பரிசு.. வேண்டாம் என திருப்பி கொடுத்த சச்சின்.. வியப்பில் ஆழ்த்திய விராட்.. பின்னணி என்ன??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறும் நேரத்தில், விராட் கோலி கொடுத்த பரிசு ஒன்றை குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் உலகின் கடவுள் என வர்ணிக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், எண்ணில் அடங்காத பல சாதனைகளை தன்னுடைய பேட்டிங் திறமையால் செய்து காட்டியுள்ளார்.
அவற்றுள் சில சாதனைகள் எல்லாம் முறியடிக்க வேண்டும் என்றால், இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். அப்படிப்பட்ட கிரிக்கெட் உலகின் தலைச் சிறந்த ஜாம்பவான், தனது ஓய்வு முடிவினை அறிவித்து, கடைசி கிரிக்கெட் போட்டியை ஆடி, ஓய்வு பெற்ற போது, இந்தியா மட்டுமில்லாமல், அனைத்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் கண்ணீர் வடித்திருந்தனர்.
கிரிக்கெட் ரசிகர்கள் கண்ணீர்
கடந்த 2013 ஆம் ஆண்டு, சச்சின் தனது ஓய்வினை அறிவித்திருந்தார். அந்த சமயத்தில், இந்திய அணியின் இளம் வீரராக இருந்த கோலி, தனக்கு அளித்த பரிசு ஒன்றைக் குறித்து, சச்சின் டெண்டுல்கர் தற்போது மனம் திறந்துள்ளார். 'இந்திய அணிக்காக, கடைசியாக ஒரு முறை கிரிக்கெட் போட்டி ஆடிவிட்டு, அதிக மன வேதனையுடன், ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு, என் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இருந்தேன். அப்போது, எனதருகில் வந்த கோலி, பரிசு ஒன்றை எனக்கு வழங்கினார்.
கோலியின் பரிசு
விராட் கோலிக்கு அவரது மறைந்த தந்தை கொடுத்த ஒரு புனித கயிறு தான் அது. அதனை, என்னிடம் விராட் கோலி கொடுத்தார். அதை வாங்கிய நான், சிறிது நேரம் என்னிடம் வைத்துக் கொண்டேன். ஆனால், கொஞ்ச நேரத்திற்கு பிறகு, அதனை மீண்டும் நான் கோலியிடமே கொடுத்து விட்டேன்.
உன்னுடனே இருக்க வேண்டும்
அதனைக் கொடுத்து விட்டு அவரிடம், "விலை மதிப்பில்லாத இந்த புனித கயிறு, உன்னிடம் மட்டும் தான் இருக்க வேண்டும். இது உன்னுடைய சொத்து. உன்னுடைய கடைசி மூச்சு வரை, இதனை நீ வைத்திருக்க வேண்டும்" எனக்கூறி விட்டு அதனை மீண்டும், கோலியிடம் கொடுத்து விட்டேன். அது மிகவும் நெகிழ்ச்சியான தருணமாகும். என்னுடைய நினைவில் எப்போதும் இருக்கும் ஒரு சம்பவம் ஆகும்' என சச்சின் டெண்டுல்கர் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்து போன தந்தை கொடுத்து விட்டுச் சென்ற புனித கயிற்றினை, சச்சினுக்கு அளிக்க வேண்டும் என்ற கோலியின் முடிவு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
ஒரே QR கோட்.. மொத்த பணமும் காலி...OLX-ல் பழைய சாமானை விற்க முயற்சித்த இளைஞருக்கு காத்திருந்த ஷாக்..!
தொடர்புடைய செய்திகள்
- குழப்பத்தில் இருந்த ரோஹித்.. கோலி சொன்ன அட்வைஸ்.. ஸ்டம்ப் மைக்கில் பதிவான வாய்ஸ்..!
- ரோகித் இதை கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருக்கலாமே.. கோலி உடனான மோதல் சர்ச்சை.. முன்னாள் வீரர் சொன்ன பதில்..!
- "பிரச்சனையே உங்களால தான்.. நீங்க வாய மூடுனா மட்டும் போதும்".. கோலி விவகாரத்தில் பொறுமை இழந்த ரோஹித் ஷர்மா
- ஏலம் முடிஞ்சதும்.. 'கோலி' அனுப்பிய 'மெசேஜ்'.. சீக்ரெட் பகிர்ந்த 'டு பிளஸ்ஸிஸ்'!!
- கோலி பார்ம்க்கு வர இதான் ஒரே வழி.. சுனில் கவாஸ்கர் சொன்ன ஐடியா..! ஆனால் அதுக்கு சச்சின் மனசு வைக்கனுமே
- கோலி உங்களுக்கு என்னதான் ஆச்சு..? மறுபடியும் இப்படி ஏமாத்திட்டீங்களே.. கடுப்பான ரசிகர்கள்..!
- "விராட் கோலிக்கு என்ன தான் ஆச்சு.. இப்டி எல்லாம் இருந்தா சரிபட்டு வராது.." விமர்சித்த ஆகாஷ் சோப்ரா
- அதை பத்தி இப்போ நினைச்சா கூட வலிக்குது.. கே.எல்.ராகுல் அடிக்கடி அந்த போட்டோவை அனுப்புவாரு.. கோலி உருக்கம்..!
- மறுபடியும் RCB கேப்டன் ஆகிறாரா கோலி..? முன்னாள் வீரர் ‘சூசகமாக’ சொன்ன பதில்..!
- அதே தப்பு.. கோலி இனிமேல் இப்படி பண்ணாதீங்க.. கடுப்பான கவாஸ்கர் கொடுத்த வார்னிங்..!