சொக்கத் தங்கம்... இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலி மைதானத்தில் கடந்த மார்ச் நான்காம் தேதி துவங்கியது. இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய ரவீந்திர ஜடேஜாவை இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி ட்வீட் செய்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Advertising
>
Advertising

100-வது டெஸ்ட்டுக்கு அப்பறம் விராட் கோலி வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ..

முதல் டெஸ்ட்

மொஹாலி டெஸ்ட் போட்டி கோலிக்கு 100வது டெஸ்ட் போட்டி என்பதாலும் ரோஹித் ஷர்மா கேப்டன் பதவிக்கு வந்திருப்பதாலும் பரபரப்புடனே மேட்ச் துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இதனை அடுத்து களத்திற்கு வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 45 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். ஆனால் அதன்பிறகு ரிஷப் பண்ட், அஷ்வின், ஜடேஜா ஆகியோர் காட்டிய அதிரடியில் இந்திய அணியின் ஸ்கோர் கிடுகிடுவென ஏறியது. இதனால் முதல் இன்னிங்சில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

ஜடேஜா அபாரம்

ஆரம்பம் முதலே இலங்கை அணி பந்துவீச்சாளர்களை பந்தாடிய ஜடேஜா ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 (228 பந்துகள் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்க்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. பின்னர் பவுலிங்கிலும் ஜடேஜா ஆதிக்கம் செலுத்தினார். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா இரண்டாம் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது.

சச்சின் பாராட்டு

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்," ஜடேஜா எல்லாவற்றையும் தங்கமாக மாற்றுகிறார். அருமையான பங்களிப்பு" எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

ரவீந்திர ஜடேஜாவை புகழ்ந்து சச்சின் போட்ட ட்வீட் இப்போது வைரலாக பரவிவருகிறது.

"அவளை இந்த நிலைமைல விட்டுட்டு".. இந்திய கணவர்.. உக்ரேனிய மனைவி.. போர் நடுவே ஒரு உருக்கமான காதல் கதை..!

CRICKET, SACHIN TENDULKAR, RAVINDRA JADEJA, INDIAN CRICKETER, BRILLIANT PERFORMANCE, SACHIN TENDULKAR PRAISES JADEJA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்