ஏன் ஒரு மேட்ச்ல கூட அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கொடுக்கவே இல்லை?.. முதல்முறையாக மௌனம் கலைத்த சச்சின்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட மகன் அர்ஜூனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து சச்சின் டெண்டுல்கர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | இலங்கை வரலாற்றுலயே இவ்வளவு ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனையானது கிடையாது..நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த விலை உயர்வு..!

இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது சீசன் ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதேபோல் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் முதல் அணியாக வெளியேறியது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக மும்பை அணியில் உள்ள இவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் சச்சின்சைட் (Sachinsight) என்ற நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் பேசினார். அப்போது இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சச்சின், ‘இது ஒரு வித்தியாசமான கேள்வி. இந்த சீசனில் மும்பை அணி தனது அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடி முடித்து விட்டது. அர்ஜூன் டெண்டுல்கரிடம் என்னுடைய உரையாடல் இப்படித்தான் இருக்கும்.

உன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை பாதை சவாலாகத்தான் இருக்கப்போகிறது. உனக்கு கிரிக்கெட் மீது ஈடுபாடு இருந்ததால் நீ கிரிக்கெட் விளையாட தொடங்கி இருக்கிறாய். அந்த ஆர்வம் இருந்தால் உனக்கான வாய்ப்பு கிடைக்கும் வரை நீ கடுமையாக உழைக்க வேண்டும். அப்படி செய்யும்போது உனக்கான நல்ல பலன் கிடைக்கும் என கூறிவேன். அர்ஜூன் டெண்டுல்கர் அணியில் இடம் பெறுவது அணி தேர்வுக்குழு எடுக்கும் முடிவு. அணி தேர்வில் ஒருபோதும் என்னுடைய தலையீடு இருக்காது. அந்த வேலை அணி நிர்வாகத்தினுடையது’ என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். அர்ஜூன் டெண்டுல்கர் இதுவரை 2 உள்ளூர் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | ஆனந்த் மஹிந்திராவுக்கு அமெரிக்காவில் கிடைத்த கவுரவம்.. நெகிழ்ச்சியில் போட்ட ட்வீட்..!

CRICKET, SACHIN TENDULKAR, ARJUN TENDULKAR, MUMBAI INDIANS, IPL 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்