"என் போட்டாவ மார்ஃபிங் செஞ்சிருக்காங்க"..சச்சின் பரபரப்பு புகார்..என்ன நடந்துச்சு..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட்டின் கடவுள் என்று தனது ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். 17 வயது முதல் கிரிக்கெட் ஆடிய சச்சின் இதுவரையில் பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். இந்நேரம் வரையில் அந்த சாதனைகளை முறியடிக்க முடியாமல் கிரிக்கெட் வீரர்கள் தடுமாறிவருகின்றனர். ஓய்வு பெற்று ஆண்டு கணக்கானாலும் சச்சினின் ரசிகர்கள் இன்றும் அவரது ரசிகர்களாகவே இருக்கிறார்கள். இந்நிலையில், அவர்களையே அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது ஒரு விளம்பரம்.
வலிமை படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு.. கோவையில் பரபரப்பு..!
பொதுவாக போதை பொருட்கள், சூதாட்டம் உள்ளிட்ட விளம்பரங்களில் நடிப்பதை தவிர்த்துவரும் சச்சினின் புகைப்படத்தை ஆன்லைன் விளம்பரத்தில் பயன்படுத்தி உள்ளது ஒரு சூதாட்ட நிறுவனம். இந்த ஆன்லைன் விளம்பரத்தை பார்த்ததும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவாவை மையமாகக்கொண்டு இயங்கிவரும் பிக் டாடி (Big Daddy) கேசினோ மையத்தின் ஆன்லைன் விளம்பரத்தில் தான் சச்சினின் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் இடம்பெற்று இருந்தது.
சச்சின் கொடுத்த விளக்கம்
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சச்சின் புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அவர்கள் பயன்படுத்தி இருப்பதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார். மேலும், புகையிலை, சூதாட்டம் உள்ளிட்ட விஷயங்களை ஆதரிப்பதில்லை எனவும் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
புகார்
தனது புகைப்படத்தை மார்ஃபிங் செய்து ஆன்லைன் விளம்பரத்திற்கு பயன்படுத்தியதாக பிக் டாடி நிறுவனத்தின் மீது சச்சின் புகார் ஒன்றினையும் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்," நான் கேசினோவை ஆதரிப்பது போல், சில விளம்பரங்கள் சமூக வலை தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. நான் சூதாட்டம், புகையிலை அல்லது மதுவை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரப்பவன் இல்லை. தவறான நோக்கத்துடன் என்னுடைய புகைப்படத்தை சிலர் உபயோகித்து இருப்பது வலியை தருகிறது. ஆகவே, என்னுடைய சட்ட குழு இது தொடர்பான நடவடிக்கையை எடுத்துவருகிறது. இந்த தகவலை அனைவரிடமும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதை நான் முக்கியமாக கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புகார் அறிக்கையினை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ளார். சச்சினின் புகைப்படத்தை தவறான நோக்கத்துடன் ஆன்லைன் விளம்பரத்தில் பயன்படுத்திய விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஜிம்மில் 181 கிலோ வெயிட்டை தூக்கிய இளம்பெண்.. கொஞ்ச நேரத்தில் நடந்த பகீர் சம்பவம்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "16 வயசுல.. இப்படி ஒரு சாதனை.. சான்ஸே இல்லை".. தமிழக சிறுவனை பாராட்டிய சச்சின்..!
- கோலி வழங்கிய பரிசு.. வேண்டாம் என திருப்பி கொடுத்த சச்சின்.. வியப்பில் ஆழ்த்திய விராட்.. பின்னணி என்ன??
- கோலி பார்ம்க்கு வர இதான் ஒரே வழி.. சுனில் கவாஸ்கர் சொன்ன ஐடியா..! ஆனால் அதுக்கு சச்சின் மனசு வைக்கனுமே
- ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த பென் ஸ்டோக்ஸ்… சச்சின் எழுப்பும் அந்தக் கேள்வி!
- "ஏதாவது புதுசா பண்ணிட்டே இருக்காப்ல.." 'இளம்' வீரரை புகழ்ந்து தள்ளிய 'சச்சின்'.. வேற லெவல் 'கவுரவம்'..
- "கேப்டன் பதவி இல்லையா...? இந்த நேரத்துல 'இவரை' பார்த்துக் கத்துக்கணும்"- கோலிக்கு முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனின் ‘ஹின்ட்'..!
- மறுபடியும் தோத்தீங்கன்னா 'ஃபேன்ஸ்' மனசு 'உடைஞ்சு' போயிடுவாங்க, அதனால இப்போ 'என்ன' பண்ணனும்னா... - இந்திய அணிக்கு 'சச்சின்' கொடுத்த அட்வைஸ்...!
- "முதல் 'ball' சச்சின் 'ஹெல்மெட்'ல பலமா பட்ருச்சு.. ஆனா அடுத்த ball'ல நடந்ததே வேற.." 'சச்சின் vs அக்ரம்' மோதலை பகிர்ந்த 'முன்னாள்' வீரர்!!
- 'சச்சினுக்கு கொரோனா பாதிப்பு'... 'மற்ற வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள கட்டாயம்'... ட்விட்டரில் சச்சின் வெளியிட்டுள்ள பதிவு!
- 'கொரோனா' டெஸ்ட் பண்ற நேரத்துல... 'சச்சின்' பார்த்த வேலை... "சேட்டை புடிச்ச ஆளா இருப்பாரு போல..." வைரலாகும் 'வீடியோ'!!