"ஆஹா, மாநாடு எஸ்.ஜே. சூர்யா ஸ்டைலில் சச்சினின் பட்டையைக் கிளப்பிய Insta போஸ்ட்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு இந்தியாவை தாண்டி, உலகெங்கிலும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வினை அறிவித்து வெளியேறிய போது, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கண்ணீர் வடித்திருந்தனர்.
பல முன்னணி மற்றும் அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர்களை ஒரு காலத்தில் அடித்து நொறுக்கிய சச்சின் டெண்டுல்கரின் பழைய கிரிக்கெட் வீடியோக்களை, கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என விரும்பும் இந்த காலத்து இளைஞர்களும் பார்த்து பல நுணுக்கங்களைக் கற்று வருகின்றனர்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், முன்னாள் வீரர்கள் பங்குபெறும் சில தொடர்களில் சச்சினைக் காணலாம். அப்பொழுதும் பழைய ஆட்டங்களைப் போலவே சச்சினின் ஷாட்கள் அமைந்திருக்கும். அதே போல, ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார். இதே அணியில் தான் ஐபிஎல் தொடரில் சச்சின் டெண்டுல்கர் களமிறங்கி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
பிளே ஆப் வாய்ப்பு கடினம்?
நடப்பு ஐபிஎல் தொடரில், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை ஆறு போட்டிகளில் ஆடி, அனைத்திலும் தோல்வியையே அடைந்துள்ளது. டாப் லெவலில் வலம் வந்த மும்பை அணி, தற்போதைய தொடரில் கடுமையாக தடுமாறி வருகிறது. இனியுள்ள அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட, ஒரு வேளை தான், மும்பை அணியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என தெரிகிறது.
வொர்க் அவுட் மோடில் சச்சின்
இந்நிலையில், மும்பை அணியின் ஆலோசகரான சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று, அதன் கேப்ஷனுக்கு வேண்டியும் அதிகம் வைரலாகி வருகிறது. மும்பை அணியினருடன் தற்போது இருக்கும் சச்சின், இன்ஸ்டாவில் தான் வொர்க் அவுட் செய்யும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மாநாடு டயலாக் மாதிரி இருக்கே??
அதில், "Sweat… Smile… Repeat!" என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா வசனம் போல இருப்பதாக குறிப்பிட்டு வருகின்றனர். வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடித்திருந்த மாநாடு திரைப்படம், டைம் லூப் கதையம்சம் கொண்ட திரைப்படமாகும்.
இதில், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த எஸ்.ஜே. சூர்யா, "வந்தான், சுட்டான், ரிப்பீட்டு.. வந்தான், சுட்டான், ரிப்பீட்டு.." என ஒரு வசனத்தை பேசி இருப்பார். இது பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தது. பல மீம்ஸ்களிலும் இதனை பகிர்ந்து வந்தனர். அதே போல, சச்சினின் கேப்ஷனும் அமைந்திருப்பதால், படிக்கும் போது எஸ்.ஜே. சூர்யா ஸ்டைலில் இருப்பதாகவும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நல்ல வேள அன்னைக்கி நான் செஞ்சுரி அடிக்கல.." சிரித்துக் கொண்டே சொன்ன சச்சின்.. இதுனால தான் அவரு 'லெஜெண்ட்'..
- ‘எவ்ளோ தடுத்தும் கேட்கல’.. சச்சின் காலை தொட்டு வணங்கிய PBKS கோச்.. நெகிழ்ச்சி வீடியோ..!
- "என்ன?, சச்சின் 3-வது நடுவரா??”.. ஒரு நிமிஷம் குழம்பிய ரசிகர்கள்.. கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்
- "தெரியாம சச்சின அவுட் எடுத்துட்டேன்.." மைதானத்திலேயே அக்தருக்கு நடந்த சம்பவம்.. "உங்கள யாரு இது எல்லாம் பண்ண சொன்னா?"
- "சச்சின் மட்டுமில்லாம, எல்லாருமே அப்ப திணறுனாங்க.. ஆனா, இந்த தமிழ்நாடு பவுலர் இருக்காரே.." மிரண்டு போன அக்தர்.. யார சொல்றாரு?
- தமிழக வீரருக்கு சச்சினின் 'ஸ்பெஷல்' அட்வைஸ்.. மிரட்டலாக ஆரம்பித்து பட்டையைக் கிளப்பிய வீரர்.. அடுத்த மேட்சும் அப்ப சம்பவம் இருக்கு..
- "என்னா ஸ்பீடு.." உத்தப்பாவை திணறடித்த KKR வீரர்.. தோனியுடன் ஒப்பிட்டு பாராட்டிய 'சச்சின்'
- "பழைய தல'ய பாத்துட்டோம்.." 2 வருஷத்துக்கு அப்புறம் தோனி செய்த சம்பவம்.. மிரண்டு போன கிரிக்கெட் ஜாம்பவான்..
- "மேட்ச்-னா இப்படி இருக்கணும்".. போடு நம்ம சச்சின் பகிர்ந்த செம்ம வீடியோ..!
- "எங்க வீட்டுக்கு வார்னே வந்தப்போ.. அவருக்கு புடிக்காத ஒண்ண பண்ணிட்டோம்.." மனம் திறந்த சச்சின்..