"என்னா ஸ்பீடு.." உத்தப்பாவை திணறடித்த KKR வீரர்.. தோனியுடன் ஒப்பிட்டு பாராட்டிய 'சச்சின்'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி இருந்த நிலையில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது.

Advertising
>
Advertising

கடந்த ஐபிஎல் சீசனின் இறுதி போட்டியில் மோதி இருந்த சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள், தற்போதைய தொடரின் முதல் போட்டியில் மல்லுக்கட்டி இருந்தது.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி, முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்திருந்தது. அதன்படி ஆடிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.

மீண்டும் பழைய ஃபார்மில் தோனி

ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன் சேர்க்க திணறிய சென்னை அணி, 61 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன் பின்னர், ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் தோனி ஆகியோர், ஆரம்பத்தில் ரன் சேர்க்க கடுமையாக தடுமாறினர்.

ஆனால், கடைசி சில ஓவர்களில், அடுத்தடுத்து பவுண்டரிகளை தோனி விரட்ட, 131 ரன்கள் எடுத்திருந்தது. மொத்தம் 38 பந்துகள் சந்தித்த தோனி, 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 50 ரன்கள் எடுத்திருந்தார். ஐபிஎல் தொடரில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அரை சதமடித்து அசத்தியுள்ளார் தோனி. தன்னுடைய பேட்டிங் மீதிருந்த விமர்சனத்தையும் ஓரளவுக்கு மாற்றியுள்ளார் அவர்.

வெற்றியுடன் ஆரம்பித்த கொல்கத்தா

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி, எளிதான இலக்கை நோக்கி நிதானமாக ஆடியது. தொடக்க வீரர் ரஹானே, அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்ற வீரர்களும் தங்களின் பங்குக்கு ரன் சேர்க்க, 19 ஆவது ஓவரில் கொல்கத்தா அணி இலக்கை எட்டியது. 15 ஆவது ஐபிஎல்; தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மின்னல் வேகம்

இந்நிலையில், கொல்கத்தா வீரர் ஒருவரை தோனியுடன் ஒப்பிட்டு, சச்சின் செய்துள்ள ட்வீட் ஒன்று, ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் பணியை இன்றைய போட்டியில், ஷெல்டன் ஜாக்சன் கவனித்து வந்தார். சென்னை அணி வீரர் ராபின் உத்தப்பா, ஆரம்பத்தில் சிறப்பாக ஆடி ரன் சேர்த்து வந்த நிலையில், கீப்பராக நின்ற ஷெல்டன் ஜாக்சன், மின்னல் வேகத்தில் அவரை ஸ்டம்பிங் செய்து அவுட் ஆக்கினார்.

ஆச்சரியத்தில் சச்சின்

இதனைக் கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அரண்டு போன நிலையில், சச்சின் டெண்டுல்கர் இது பற்றி ட்வீட் ஒன்றையும் செய்துள்ளார். "அது மிகவும் சிறப்பான ஸ்டம்பிங். ஷெல்டன் ஜாக்சனின் வேகம், எனக்கு எம்.எஸ். தோனியை நினைவுபடுத்தியது. மின்னல் வேகம்!!" என ஆச்சரியத்துடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வீரரான ஷெல்டன் ஜாக்சன், ரஞ்சி தொடரில் பல சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். அப்படிப்பட்ட ஒரு புகழ்பெற்ற இந்தியாவைச் சேர்ந்த வீரரை, சமீபத்தில் சில பத்திரிகையாளர்கள் வெளிநாட்டு வீரர் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MSDHONI, SACHIN TENDULKAR, ROBIN UTHAPPA, SHELDON JACKSON, IPL 2022, CSK VS KKR, ஷெல்டன் ஜாக்சன், சச்சின் டெண்டுல்கர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்