மறுபடியும் தோத்தீங்கன்னா 'ஃபேன்ஸ்' மனசு 'உடைஞ்சு' போயிடுவாங்க, அதனால இப்போ 'என்ன' பண்ணனும்னா... - இந்திய அணிக்கு 'சச்சின்' கொடுத்த அட்வைஸ்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் டி20 தொடரின் ஆட்டத்தை குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் விளக்கமளித்துள்ளார்.

Advertising
>
Advertising

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்த சூழலில் இப்போது அரை இறுதிக்குளே செல்லுமா என்ற கேள்வியே எழுந்துள்ளது. இதுவரை டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வியடைந்ததே கிடையாது என்ற பெருமையையே இந்தியா இப்போது இழந்துவிட்டது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறிய செய்தி வைரலாகியுள்ளது.

அதில், 'இந்திய அணி இப்போது ஒரு கடினமான சூழலை எதிர்கொண்டு வருகிறது. வரும் தொடர்களில் இந்திய அணி தன்னுடைய முழு ஆட்ட திறமையை காட்ட தவறினால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான சென்ற போட்டியில் 6 முதல் 10-வது ஓவர் வரை இந்திய அணி வெறும் 13 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் ஒரு சிங்கிள்களை கூட எடுக்க முடியவில்லை.

அந்த சூழலில், பெரிய ஷாட்களை அடித்தே ஆக வேண்டும் என்ற சூழலுக்கு இந்தியா தள்ளப்பட்ட பல விக்கெட்களை இழந்தோம். நியூசிலாந்து அணியின் லெக் ஸ்பின்னர்கள் கூக்ளீஸ், டாப் ஸ்பின், ஃப்ளிப்பர் என மாற்றி மாற்றி வீசி இந்திய வீரர்களை திணரடிக்கிறார்கள்.

இப்போது மட்டுமல்ல கடந்த சில ஆண்டுகளாக இதே யுக்தியை தான் நியூசிலாந்து இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது. இருப்பினும் இந்தியா இதுவரை அதற்கு தயாராக வில்லை. இந்தியா சரிசெய்ய வேண்டும்.

நியூசிலாந்து அணி பவுலிங்கில் செலுத்திய வேலையை இந்தியா தனது அணியில் செலுத்த தவறவிட்டுவிட்டது. இப்போது இருக்கும் நிலையை கண்டோ, எதிர்ப்புகளை கண்டோ இந்திய வீரர்கள் சோர்ந்து அமரக்கூடாது. முடிந்ததை மறந்தே தீர வேண்டும்' என சச்சின் தெரிவித்து இந்திய வீரர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளார்.

SACHIN TENDULKAR, T20 SERIES.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்