அந்த ஊர் சாப்பாடு பத்தி சொல்லவா வேணும்.. இந்தியாவின் பிரபலமான சுற்றுலா தலத்தில் சச்சின்! செம்ம Enjoyment தான்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தற்போது இந்தியா முழுவதும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | 250 பெண்களை வரன் பார்க்க குவிந்த 11 ஆயிரம் பேர்.. ஒரே நாளில் ட்ரெண்ட் ஆன சம்பவம்!!

'கிரிக்கெட்டின் கடவுள்' என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், அவரது பேட்டிங் திறமையால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்ற பின்னர் சச்சின், அவ்வப்போது  சுற்றுலா, குடும்பத்துடன் நேரம் செலவிடுதல், கிரிக்கெட் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ளுதல் என பிஸியாக வலம் வருகிறார். 

சமீபத்தில் கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சச்சின் அங்கு மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடித்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பெனாலியம் கடற்கரையில் பாரம்பரிய முறையில் மீன்பிடித்த மீனவர்களை சந்தித்து பேசுவது போல அந்த வீடியோ அமைந்திருந்தது. அந்த 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகியது.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தற்போது ‘பிங்க் சிட்டி’யான ஜெய்ப்பூரில் இருக்கிறார். உணவுப் பிரியரான சச்சின், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரீல் வீடியோவை வெளியிட்டுள்ளார், அந்த வீடியோவில் அவரது மேஜையில் பாரம்பரிய ராஜஸ்தானி காலை உணவு தாலி வைக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், சச்சின் தனது காலை உணவை உண்டு கொண்டே "ஜெய்ப்பூரில் இருக்கும்போது, ​​ஜெய்ப்பூரில் பிறந்தவரை போல உங்கள் காலை உணவை உண்ண வேண்டும்" என்று வீடியோவில் பேசுகிறார்.

உணவு தட்டில்,  நிறைய சமோசாக்கள் மற்றும் கச்சோரிகள் இடம்பெற்றுள்ளன.  மூன்று வகையான குழம்பு வகைகள் (உருளைக்கிழங்கு உட்பட) கிண்ணங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் சிவப்பு மற்றும் பச்சை நிற சட்னியும் இடம் பெற்றுள்ளன. ஒரு குவளை நிறைய லஸ்ஸி எனும் இனிப்பு மோர் இடம் பெற்றுள்ளது. இனிப்பு மோரை குடித்த படி சச்சின் வீடியோவில் பேசுகிறார்.

நட்சத்திர விடுதியின் சுற்றுப்புறத்தின் நீண்ட காட்சியும், பின்னணியில் மயில் அகவும் குரலும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

 

Also Read | நண்பரின் திருமணத்திற்கு.. சேலையில் வந்த அமெரிக்கர்கள்..😍 வைரல் வீடியோ!!

SACHIN, SACHIN TENDULKAR, JAIPUR RAJASTHAN BREAKFAST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்