சச்சின் & அவரது மனைவி அஞ்சலியை சந்தித்த பில்கேட்ஸ்.. பின்னணி என்ன..? முழு விவரம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

'கிரிக்கெட்டின் கடவுள்' என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், அவரது பேட்டிங் திறமையால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

Advertising
>
Advertising

                                 Images are subject to © copyright to their respective owners.

Also Read | உலகின் ரொம்ப பாதுகாப்பான Vault.. மொத்த மக்களையும் காப்பாத்த ஐநா போட்ட பிளான்.. பிரம்மிக்க வைக்கும் பின்னணி..!

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்ற பின்னர் சச்சின், அவ்வப்போது  சுற்றுலா, குடும்பத்துடன் நேரம் செலவிடுதல், கிரிக்கெட் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ளுதல் என பிஸியாக வலம் வருகிறார். 

சில மாதங்களுக்கு முன் கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சச்சின் அங்கு மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடித்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பெனாலியம் கடற்கரையில் பாரம்பரிய முறையில் மீன்பிடித்த மீனவர்களை சந்தித்து பேசுவது போல அந்த வீடியோ அமைந்திருந்தது. அந்த பல லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகியது.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்  ‘பிங்க் சிட்டி’யான ஜெய்ப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது  பாரம்பரிய ராஜஸ்தானி காலை உணவு உண்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவியது. பின்னர் தாய்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின.

Images are subject to © copyright to their respective owners.

தற்போது இந்தியா வந்துள்ள கோடீஸ்வரர்  பில்கேட்சை, மும்பையில்  சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி  சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம், பில் கேட்ஸ் இந்தியாவில் பல தொண்டு முயற்சிகளுக்கு நிதியளித்துள்ளார். "அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ளோம்" என்று பில்கேட்ஸ் அறக்கட்டளை அதன் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் பில்கேட்ஸ் பவுண்டேசன், இனப்பெருக்கம், மகப்பேறு, குழந்தைப்பேறு மற்றும் குழந்தை ஆரோக்கியம் & ஊட்டச்சத்து ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இவை சச்சின் டெண்டுல்கரின் அறக்கட்டளை கவனம் செலுத்தும் பகுதிகளாகும். சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை, முனிசிபல் மருத்துவமனைகள் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து, ஆதரவற்ற குழந்தைகளுக்கு மலிவு விலையில் சுகாதார சேவையை வழங்குகிறது.

இந்த சந்திப்பு குறித்து ட்விட்டர் பக்கத்தில் “நாம் அனைவரும் வாழ்நாள் முழுவதும் மாணவர்கள். இந்த சந்திப்பு, எங்கள் அறக்கட்டளை செயல்படும் குழந்தைகளின் ஆரோக்கியம் சார்ந்த பல தொண்டு விஷயங்களை கற்க இன்று ஒரு அற்புதமான  வாய்ப்பாக இருந்தது" என்று சச்சின் டெண்டுல்கர் ட்வீட் செய்துள்ளார்.

Also Read | "எப்புடிங்க".. வலையில் சிக்கிய ராட்சத மீன்... மீனவருக்கு அடித்த ஜாக்பாட்.. விலை மட்டும் இவ்ளோ ரூபாய்க்கு போகுமா?!!

SACHIN TENDULKAR, ANJALI TENDULKAR, BILL GATES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்