‘இந்த வருடத்திற்கான முக்கிய விருது அறிவிப்பு..’ இந்தியாவின் லெஜண்ட் வீரரைக் கௌரவித்த ஐசிசி..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்த ஆண்டுக்கான ஹால் ஆஃப் ஃபேம் விருதுகளை அறிவித்துள்ளது.
கிரிக்கெட்டில் சாதனை புரியும் வீரர்களைக் கௌரவிக்கும் விதமாக ஐசிசி ஆண்டுதோறும் ஹால் ஆஃப் ஃபேம் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் உலகில் ஒரு நாள் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர், டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்த வீரர், 100 சதங்கள் அடித்த முதல் வீரர் எனப் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான சச்சினுக்கு இந்தச் சிறப்பை அளித்துள்ளது ஐசிசி.
ஏற்கெனவே இந்தியாவிலிருந்து பிஷன் சிங் பேடி (2009), சுனில் கவாஸ்கர் (2009), கபில் தேவ் (2009), அனில் கும்ப்ளே (2015), ராகுல் ட்ராவிட் (2018) ஆகியோர் இந்தப் பெருமையைப் பெற்றுள்ளனர். தற்போது ஆறாவதாக சச்சின் டெண்டுல்கருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சச்சினுடன் சேர்த்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை கேதரின் ஃபிட்பாட்ரிக் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
'நீங்க எவ்வளவு கெத்தா இருந்தீங்க'... 'விளையாட தடை விதித்த 'ஐசிசி'... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
தொடர்புடைய செய்திகள்
- உலகக்கோப்பைக்குபின் ஐசிசி வெளியிட்ட முக்கிய பட்டியல்..! முதல் இடம் பிடித்து அசத்திய 2 இந்திய வீரர்கள்..!
- ‘பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றி’... ‘சச்சின் கூறிய கருத்து’!
- ‘சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐசிசி..’ இறுதியாக அளித்துள்ள விளக்கம்..
- இவர் இல்லாத ஒரு டீமா..? ‘சச்சின் தேர்வு செய்துள்ள அணியால்..’ அதிருப்தியில் ரசிகர்கள்..
- ‘ஐசிசி உலகக் கோப்பை அணி பட்டியல்’... ‘இடம் பிடித்த இரு இந்திய வீரர்கள்’!
- ‘தொடர்ந்து என்ன இம்ப்ரெஸ் பண்ணிட்டே இருக்காரு’.. வில்லியம்சனை பாராட்டி ட்வீட் செய்த பிரபல வீரர்..!
- 'உலகக்கோப்பை' இறுதி போட்டியில் நிகழ்ந்த களேபரம்'... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
- 'நடுவர்களை அறிவித்த ஐசிசி'... 'செம கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்'... அப்படி என்ன தான் பண்ணுனாரு?
- ‘பிரபல ஆஃப்கான் கிரிக்கெட் வீரர் விளையாட 1 வருடம் தடை’.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
- ‘பல வருடமா யாரும் நெருங்காத சச்சினின் மாபெரும் சாதனை’.. 27 ரன்னில் முறியடிக்க காத்திருக்கும் இந்திய அதிரடி வீரர்!