ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த பென் ஸ்டோக்ஸ்… சச்சின் எழுப்பும் அந்தக் கேள்வி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது.

Advertising
>
Advertising

இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், மூன்றிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆறுதல் வெற்றி பெறும் நோக்கத்துடன் இங்கிலாந்து தற்போது 4வது போட்டியை ஆடி வருகிறது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் முடிவடைந்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 416 ரன்கள் குவித்திருந்த நிலையில், இங்கிலாந்து 258 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மட்டுமே மீதம் இருப்பதால் இந்தப் போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து இன்னிங்ஸின் போது, ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ‘ஜஸ்ட் மிஸ்ஸில்’ பந்து ஸ்டம்ப்பில் பட்ட பின்னரும் அவுட் ஆகாமல் எஸ்கேப் ஆனார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

குறிப்பாக ஸ்டம்ப்பில் ஒரு பந்து பட்டால் அவர் அவுட் கொடுக்க வேண்டும் என்று பல நெட்டிசன்கள் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள்.

இந்த விவகாரம் பற்றி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் தன் கருத்தைக் கூறியுள்ளார். அவர், ‘பந்து ஸ்டம்ப்பில் பட்ட பின்னரும் பெய்ல்ஸ் விழாமல் இருந்தால் அதை அவுட் கொடுக்க ‘ஹிட்டிங் தி ஸ்டம்ப்ஸ்’ என்று ஒரு விதி அறிமுகப்படுத்த வேண்டுமா? கிரிக்கெட் விளையாட்டு என்பது பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்க வேண்டும் தானே? என்ன நினைக்கிறீர்கள்’ என்று கூறி ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னை டேக் செய்துள்ளார். சச்சினின் இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.

CRICKET, SACHIN TENDULKAR, BEN STOKES, ASHES TEST, சச்சின் டெண்டுல்கர், ஆஷஸ் டெஸ்ட், பென் ஸ்டோக்ஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்