"எனக்கும் அவர் பௌலிங்ல விளையாடணும்... எல்லோரும் அவர பத்திதான் பேசறாங்க!!!"... 'சச்சின் எதிர்கொள்ள விரும்பும் இளம்வீரர்???'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇப்போதுள்ள பந்துவீச்சாளர்களில் தனக்கு மிகவும் பிடித்த பந்துவீச்சாளர் குறித்து சச்சின் டெண்டுல்கர் பேசியுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தற்காலத்தில் உள்ள வீரர்களை எதிர்கொண்டால் எப்படி இருக்கும் என்பது குறித்து அதிகளவில் தற்போது விவாதங்கள் நடத்தப்படுகின்றன. அதாவது, விராட் கோலிக்கு கிளென் மெக்ரத் பந்துவீசினால் எப்படி இருக்கும், ஆடம் கில்கிறிஸ்ட்டிற்கு பும்ரா யார்க்கர் வீசினால் எப்படி இருக்கும் போன்ற விவாதங்கள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது கிரிக்கெட் ஜாம்வான் சச்சின் டெண்டுல்கரும் இதுபோன்ற விவாதத்தில் பங்கேற்று சுவாரஸ்யமாக பேசியுள்ளார்.
அந்த விவாதத்தில் அவரிடம், தற்காலத்தில் நீங்கள் யாரை எதிர்கொள்ள விரும்புகிறீர்கள்? பேட் கம்மின்ஸ், ஜஸ்பிரித் பும்ரா, ஜோப்ரா ஆர்ச்சர் போன்றவர்களில் யார் என்று சொல்லுங்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சச்சின், இப்போதுள்ள பௌலர்களில் ரஷித் கானை எதிர்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷித் கான் பற்றி பேசியுள்ள சச்சின், "எல்லோரும் அவருடைய பந்துவீச்சு குறித்து தான் பேசுகின்றனர். அதனால் எனக்கும் அவருடைய பந்தை எதிர்கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது. அவரை எதிர்கொள்வது சுவாரஸ்யமாக இருக்கும். ரஷித் கான் தன்னுடைய பந்துவீச்சில் சில மாறுதல்களை அடிக்கடி செய்யக் கூடியவர். கூக்ளி, லெக் ஸ்பின், டாப் ஸ்பின் என அனைத்தையும் கலந்து வீசி வருகிறார். அவரை எதிர்கொள்வது நிச்சயம் நன்றாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அன்னைக்கு 241 ரன் அடிக்க ஒரு ‘பாட்டு’ தான் காரணம்.. ரொம்ப பிடிச்ச ஒரு ‘ஷாட்டை’ கடைசிவரை அடிக்கவே இல்ல.. ‘மாஸ்டர்’ சொன்ன ரகசியம்..!
- VIDEO: வருண் ஆடிய ‘காதல்’ கிரிக்கெட்.. பொருத்தமான பேக்ரவுண்ட் ‘சாங்’.. வைரலாகும் ‘க்யூட்’ வீடியோ..!
- ‘நீண்டநாள் தோழியுடன் திருமண பந்தத்தில்’... ‘அடியெடுத்து வைத்த தமிழக வீரர்’... ‘வைரலாகும் ஃபோட்டோக்கள்’... ‘குவியும் பாராட்டுக்கள்’...!!!
- VIDEO: இப்டி ‘மாஸ்’ காட்டுவார்னு யாருமே எதிர்பாக்கல.. கோலி முகத்துல அப்டி ஒரு ‘சந்தோஷம்’.. வைரலாகும் வீடியோ..!
- ‘இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும்’... 'முதல் போட்டியே சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தான்’... ‘வாய்ப்பு கிடைத்தது எப்படி?’... ‘வெளியான தகவல்’...!!!
- 'கங்குலியின் பிளானுக்கு எழுந்த அடுத்தடுத்த சிக்கல்?!!'... 'மெகா Auction இருக்கா, இல்லையா???'... 'புது பிளான் போடும் பிசிசிஐ!!!'...
- "'நடராஜன்' பத்தி 'சச்சினே' இப்டி ஒரு விஷயத்த சொல்லிட்டாரா??!!..." இது வேற மாதிரி 'சம்பவம்'ல.. அசத்தல் 'பின்னணி'!!!
- ‘கொரோனாவுக்குப் பின் முதன்முறையாக நடக்கும் போட்டி’... ‘அதுவும் சென்னையில் தான் பர்ஸ்ட்’... ‘பிசிசிஐ வெளியிட்ட அட்டவணை’...!!!
- ‘பேட்டிங் ஃபார்மில் செமையாக இருந்தும்’... ‘டெஸ்ட் போட்டியில் இல்லாத ஆல்ரவுண்டர்’... ‘வெளியான உண்மையான காரணம்’...!!!
- "இனிதான் நடராஜனுக்கு சிக்கலே இருக்கு... இதுல மட்டும் கவனமா இல்லன்னா"... 'குவியும் பாராட்டுகளுக்கு நடுவே'... 'எச்சரித்துள்ள சேவாக்!!!'...