கோலி ஹோட்டல் 'ரூம்'ல உட்கார்ந்து 'ஃபீல்' பண்ணிட்டு இருப்பாரு...! இதெல்லாம் தேவையா...? - முன்னாள் கிரிக்கெட் 'ஜாம்பவான்' விமர்சனம்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென்ஆப்பிரிக்க வீரர் பொல்லாக் இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் ஆட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தென் ஆப்பரிக்கவிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை விளையாட உள்ளது. அதன் தொடக்கமாக செஞ்சூரியன் மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இரு நாடுகள் மோதும் போட்டியின் முதல் நாளில் இந்தியா டாஸ் வென்ற நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். எப்போதும் செஞ்சூரியன் மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்யும். ஆனால் புதிதாக விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

Advertising
>
Advertising



முதலில் களத்தில் இறங்கிய இந்திய அணி பேட்டிங் எடுத்தது சற்றும் தவறில்லை என நிரூபிக்கும் வகையில், துவக்க வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் அபாரமாக விளையாடினர்.  முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 117 ரன்கள் சேர்த்தது. துரதிஸ்டவசமாக மயங்க் அகர்வால் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.



அடுத்ததாக வந்த புஜாரா வந்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 4-வது வீரராக களமிறங்கிய கேப்டன் விராட் கோலியின் மீது தான் அனைவரின் எதிர்பார்ப்பும் இருந்தது.

முதலில் எதிர்பார்த்ததை போல எந்த திணறலும் இல்லாமல் பவுண்டரிகளை அடித்து வந்தார் விராட் கோலி. கோலி விளையாடிய விதம் வைத்து பார்க்கையில், எளிதாக அரைசதம் கடந்து, இம்முறை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது சுமார், 35 ரன்கள் எடுத்திருந்தபோது வெளியே சென்ற பந்தை விளையாட முயற்சித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். என்னடா இது இந்த மைதானத்தில் பேட்டிங்கை தேர்வு செய்த விராட் ஒரு சதத்தையாவது அடித்து காட்டுவார் என்ற அவர் ரசிகர்களின் கனவு காற்றோடு சென்றது.



இந்நிலையில் விராட்டின் இந்த ஆட்டம் குறித்து தென்ஆப்பிரிக்க ஜாம்பவான் ஷான் பொல்லாக் விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, 'விராட் கோலி ஆட்டம் இழந்த விதம் அனைவருக்கும் மிகவும் ஏமாற்றத்தை கொடுத்தது. அப்போது தான் அவர் களத்தில் நிலையான ஆட்டத்தை பெற்று கொண்டிருந்தார். மிகப் பெரிய ஸ்கோர் எடுப்பார் என்ற அளவிற்கு அவரது ஆட்டம் இருந்தது. அவரது கால்கள் பந்தை நோக்கி சிறப்பாக நகர்ந்து கொண்டிருந்தன.

35 ரன்கள் அடித்து நிலைத்து நின்று கொண்டிருந்தபோது, தேவையில்லாமல் வெளியில் சென்ற பந்தை அடிக்க முயற்சித்து அவுட் ஆகினார். விராட் இப்போது ஹோட்டல் அறையில் அமர்ந்து, இதனை நினைத்து மிகவும் ஆத்திரத்துடன் இருப்பார் என நினைக்கிறேன்' எனக் கூறியுள்ளார்.

CRICKET, SA SHAUN, VIRAT KOHLI, தென்ஆப்பிரிக்க வீரர், பொல்லாக், விராட் கோலி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்