‘அவர் எப்படி இதை பண்ணலாம்?’.. கோபத்தில் கிரிக்கெட் வாரியம்.. ஒரே ஒரு ட்வீட்டால் சிக்கலில் சிக்கிய சர்வதேச கிரிக்கெட் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஜிம்பாப்பே கிரிக்கெட் வீரர் ரியான் பர்ல் பதிவிட்ட ஒரே ஒரு ட்விட்டால் சிக்கலில் மாட்டியுள்ளார்.

ஜிம்பாப்வே அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரியான் பர்ல் (Ryan Burl) சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் கிழிந்த ஷூக்களை ஒட்டும் போட்டோ ஒன்றை பதிவிட்டிருந்தார். மேலும் அதில், ‘எங்களுக்கு ஸ்பான்ஸர் கிடைக்க ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா? அப்படி நடந்தால், ஒவ்வொரு கிரிக்கெட் தொடருக்கு பின்பும் எங்கள் ஷூவை பசை வைத்து ஒட்ட வேண்டிய அவசியம் இருக்காது’ என பதிவிட்டிருந்தார்.

ரியான் பர்லின் இந்த உருக்கமான ட்வீட் பல சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் ரீ ட்வீட் செய்தனர். இதனால் இணையத்தில் வைரலாக பரவியது. இதனை அடுத்து காலணிகள் தயாரிக்கும் நிறுவனமான Puma, ஜிம்பாப்பே அணிக்கு உதவ முன்வந்தது. இதற்கு ரியார் பர்ல் நன்றி தெரிவித்திருந்தார். ட்விட்டரில் பதிவிட்ட 24 மணிநேரத்துக்குள் அவருக்கு உதவி கிடைத்தது.

இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் ரியான் மீது கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, பத்திரிகையாளர் ஆடம் தியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரிகள் ரியான் பர்ல்ஸின் வேண்டுகோளால் மகிழ்ச்சியடையவில்லை. சில உறுப்பினர்கள் ரியான் பர்லின் ஸ்பான்சர்ஷிப் உதவி கோரிக்கை குறித்து கோபமாக இருப்பதாக தெரிகிறது.

ஏனெனில், இது ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை மோசமானதாக காட்டும் வகையில் உள்ளது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான் கூறினேன்’ என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ரியான் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என கூறப்படுவதால், அவர் பெரிய சிக்கலில் மாட்டியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்