'அவரு' பவுலிங் போடுறப்போ எனக்கு அள்ளு விட்ரும்...! பந்த எடுத்திட்டு ஓடி வர்றப்போ ஒரு 'கெட்ட கனவ' பார்த்தது போல இருக்கும்...! - ஒளிவு மறைவில்லாம பேசிய இளம் வீரர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி தொடங்கி இரு மாதங்களாக நடைபெற உள்ளது இந்த தொடரில் எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்று அனைத்து அணிகளும் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், ஏப்ரல் 12-ஆம் தேதி அன்று சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது.

                                   

இந்த போட்டியில் எப்படியாது ஜெயித்துவிட வேண்டும் என்ற முனைப்போடு இரு அணி வீரர்களும் தங்களை முழுமூச்சோடு தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் இருப்பதன் காரணமாக இந்த ஐபிஎல் போட்டி பயோ பப்பில் விதிமுறைகளை பின்பற்றி நடக்க உள்ளது.

                                                             

இந்த நிலையில் ஐபிஎல் போட்டிக்கான பயோ பப்பில் விதியை கடைபிடித்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரியன் பராக் ஐபிஎல் போட்டி பயிற்சிக்கு முன் தன்னை குவாரண்டைன் செய்துக் கொண்டுள்ளார். அப்போது ட்விட்டரில் தன் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் பல விஷயங்களை எவ்வித ஒளிவு மறைவின்றி பகிர்ந்து கொண்டார்.

                                     

அப்போது, ரசிகர் ஒருவர் எந்த பவுலரை பேஸ் பண்றப்போ கஷ்டமா இருக்கும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், சந்தேகமே இல்ல, அது இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தான், அவர் பால் போடுறப்போ சமாளிப்பது என்பது ஒரு கெட்ட கனவு போல இருக்கும் என்று பதிலளித்தார்.

                                           

மேலும் அவரிடம் உங்களுக்கு எந்த ஐபிஎல் டீமுக்கு எதிராக விளையாட பிடிக்கும் என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார். அப்போது,  இரண்டு முறை டைட்டில் பட்டத்தை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

                           

ஏனென்றால் அந்த அணியில் நிறைய திறமையான ப்ளேயர்ஸ் இருக்காங்க என்று பதிலளித்தார். மேலும் தனக்கு 'புல் சாட்' அடிப்பது ரொம்ப பிடிக்கும், காரணம் கேட்டீங்கன்னா அந்த ஒரு சாட்டை வச்சு தான் நிறையரன்களை குவித்து உள்ளேன் என்று கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்