"'இளம்' வீரர்கள் கிட்ட 'spark' பத்தல..." 'தோனி' சொன்ன 'கருத்து' தொடர்பாக... முதல் முறையாக 'மனம்' திறந்த 'ருதுராஜ்' கெய்க்வாட்...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் எப்போதும் பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் முதல் முறையாக வெளியேறியது.

தோனி உள்ளிட்ட அணியில் இடம்பெற்றிருந்த சீனியர் வீரர்கள் யாரும் பெரிதாக ஜொலிக்கவில்லை. டு பிளஸ்ஸி தவிர மற்ற அனைத்து வீரர்களும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக தோனியின் பேட்டிங் கடுமையான விமர்சனத்துக்குள் ஆக்கப்பட்டது.

கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்த போது பேசிய தோனி, அணியிலுள்ள இளம் வீரர்களிடம் பெரிதாக ஸ்பார்க் (Spark) இல்லை என தெரிவித்திருந்தார். இளம் வீரர்களுக்கு பெரிதாக வாய்ப்புகளை அளிக்காமல் அவர்களிடம் ஸ்பார்க் இல்லை என தோனி எப்படி குறை கூற முடியும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, சென்னை அணியின் கடைசி 3 லீக் போட்டிகளில் சென்னை அணியில் இடம்பெற்றிருந்த இளம் வீரர் ருத்துராஜ் ஜெய்க்வாட், தொடர்ச்சியாக மூன்று அரை சதமடித்து அசத்தியிருந்தார்.

இதனால், இளம் வீரர்களிடம் ஸ்பார்க்கை காணவில்லை என்ற தோனியின் கருத்திற்கு ஜெய்க்வாட் இன்னிங்ஸை காட்டி இந்த ஸ்பார்க் போதுமா என்பது போல ரசிகர்கள் மீண்டும் தோனியை சீண்டினர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இளம் வீரர் ஜெய்க்வாட், தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.

'தோனி சொன்னதை நான் சரியாக படிக்கவில்லை. ஆனால், அவர் நிச்சயம் அந்த உள்நோக்கத்துடனும் அப்படி சொல்லியிருக்க மாட்டார். அவர் எதையோ ஒன்றை யோசித்து அப்படி சொல்லியிருக்க வேண்டும். ஆனால், மக்கள் அதனை தவறாக புரிந்து கொண்டார்கள். 

பயிற்சியின் போது எனது பேட்டிங் தொடர்பாக தோனி அதிக அறிவுரைகளை வழங்குவார். அதே போல, எனது பேட்டிங்கும் அவருக்கு மிகவும் பிடிக்கும். பேட்டிங் குறித்து உனது செயல்முறை சரியாக இருக்க வேண்டும். அதன் முடிவுகள் குறித்து ஒரு போதும் கவலைப்படக்கூடாது என தோனி அறிவுரை வழங்குவார். நான் அதனை  பின்பற்றினேன்' என தோனி இளம் வீரர்களை குறிப்பிட்டு அப்படி சொல்லவில்லை என ஜெய்க்வாட் விளக்கமளித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்