VIDEO: ஒரே ஓவரில் ஏழு சிக்ஸ்.‌. அதுமட்டுமா டபுள் செஞ்சுரி வேற! ருத்ர தாண்டவம் ஆடிய ருத்ராஜ் கெய்க்வாட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.

Advertising
>
Advertising

38 அணிகள் மோதும் இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் முடிந்து தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் உள்ள பல்வேறு மைதானங்களில் இந்த போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்த காலிறுதி ஆட்டத்தில் தமிழக அணி சௌராட்டிர அணியை எதிர்த்து விளையாடுகிறது. மற்ற ஆட்டங்களில் பஞ்சாப் & கர்நாடகம், மகாராஷ்டிரா & உத்திரப் பிரதேசம், அசாம் & ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.

இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மகாராஷ்டிரா அணி உத்திரப் பிரதேசம் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற உத்திரப் பிரதேசம் அணி முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்த மகாராட்டிரா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்தது. மஹாராஷ்டிரா அணி கேப்டனும், இந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான க்ஷ ருத்ராஜ் கெய்க்வாட் 159 பந்தில் 220 ரன்கள் குவித்தார்.

மேலும் ஆட்டத்தின் 49வது ஓவரில் ஏழு சிக்ஸர்கள் விளாசினார். இந்த ஓவரை உத்திரப் பிரதேச அணியின் பந்து வீச்சாளர் ஷிவ சிங் வீசினார். இந்த ஓவரில் ஒரு நோ பால் வீசியதால் ஏழு பந்துகளும் சிக்ஸருக்கு சென்றன. முதல் பந்து லாங் ஆன் திசையிலும், இரண்டாவது பந்து ஸ்ட்ரெயிட்டிலும், மூன்றாவது பந்து லாங் ஆன் திசையிலும், நான்காவது பந்து லாங் ஆஃப் திசையிலும், ஐந்தாவது பந்து ஸ்ட்ரெயிட்டிலும், ஆறாவது & ஏழாவது பந்து லாங் ஆன் திசையிலும் சென்றன.

ருத்ராஜ், லிஸ்ட் ஏ போட்டிகளில் ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

CRICKET, BCCI, ICC, RUTURAJ, RUTURAJ GAIKWAD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்