'தோனி கற்றுக்கொடுத்த வித்தை'!.. இலங்கை அணிக்கு எதிராக இறக்கப் போவதாக ருத்துராஜ் திட்டவட்டம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், தன்னுடைய சிறப்பான ஆட்டத்திற்கு தோனி அளித்த பங்களிப்பு குறித்து பேசியிருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ருத்துராஜ் கெய்க்வாட் தேசிய அளவிலும், ஐபிஎல் களத்திலும் தனது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். அதன் மூலம் அவருக்கு இலங்கை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. தோனி தலைமை தாங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் லீக்கில் விளையாடி வருகிறார் ருத்துராஜ்.

இந்நிலையில், தோனி குறித்து பேசியுள்ள ருத்துராஜ், "தோனி எனக்கு பெரிதும் உதவியுள்ளார். தொடக்கத்தில் ஐபிஎல் களத்தில் நான் ரன் சேர்க்க தவறியபோது என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தார்.

அதனால் நான் உறுதியுடன் ஆட்டத்தை அணுகினேன். அதன் மூலம் ரன்களும் சேர்த்தேன். அவர் கொடுத்த ஆலோசனைகள் இலங்கைக்கு எதிரான தொடரில் உதவும் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்