"இத பாத்து, டு பிளெஸ்ஸிஸ் பொறாமை பட்டுருப்பாரு போல.." போட்டிக்கு பிறகு ருத்துராஜ் சொன்ன விஷயம்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்றிருந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களின் மூன்றாவது வெற்றியை பதிவு செய்திருந்தது.

Advertising
>
Advertising

Also Read | "மேட்ச் ஜெயிக்குற நேரத்துல.." திடீரென கோபப்பட்ட தோனி.. "எல்லாம் அந்த ஒரு Ball-க்காக தான்.."

இந்த போட்டிக்கு முன்பாக, ரவீந்திர ஜடேஜா தலைமையில் 8 போட்டிகள் ஆடி இருந்த சிஎஸ்கே, இரண்டில் மட்டுமே வெற்றி கண்டிருந்தது.

இதனிடையே, தனது கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா திடீரென விலகிக் கொள்ள, மீண்டும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி  நியமிக்கப்பட்டிருந்தார்.

சிஎஸ்கே அணியின் 3 ஆவது வெற்றி

இனிமேல், தோனியை கேப்டனாக பார்க்க முடியாது என வேதனையில் இருந்த ரசிகர்கள், மீண்டும் அவரை கேப்டனாக அறிவித்ததும் இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடி போனார்கள். ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும், தோனி தலைமையில் தான் சிஎஸ்கே களமிறங்கி இருந்தது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்திருந்தது. இதனால், 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சிஎஸ்கே, நடப்பு சீசனில் 3 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது. மீதமுள்ள 5 லீக் போட்டிகளில், தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தால் தான், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியான சூழ்நிலையும் உள்ளது.

ருத்துராஜ் - கான்வே பார்ட்னர்ஷிப்

இதனிடையே, ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், ஒரு முக்கியமான சாதனையை சிஎஸ்கேவின் தொடக்க ஜோடி செய்து பட்டையைக் கிளப்பி உள்ளது. திருமணம் முடிந்து சிஎஸ்கேவுடன் இணைந்த டெவான் கான்வே, நேற்றைய (01.05.2022) போட்டியில் களமிறங்கி இருந்தார். ருத்துராஜ் மற்றும் கான்வே  ஆகியோர், முதல் விக்கெட்டுக்கு சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர்.

இருவரும் இணைந்து, 182 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, சிஎஸ்கேவின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இது உருவானது. அதே போல, ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில், தொடக்க ஜோடியின் நான்காவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகவும் இது அமைந்தது. டெவான் கான்வே 85 ரன்களும், இந்த சீசனில் ஃபார்மில் இல்லாமல் இருந்த ருத்துராஜ், 99 ரன்களும் எடுத்து ஆட்ட நாயகன் விருதினையும் தட்டிச் சென்றிருந்தார்.

"பாப் பொறாமைப்படுவாரு.."

இந்நிலையில், போட்டிக்கு பின்னர் பாப் டு பிளெஸ்ஸிஸ் பற்றி ருத்துராஜ் சொன்ன விஷயம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. "சிஎஸ்கே அணிக்காக இது சாதனை பார்ட்னர்ஷிப்பாக உருவாகி உள்ளது. இதனை பார்த்து, பாப் பொறாமைபடுவார் என நான் நினைக்கிறேன். ஆனாலும் பரவாயில்லை. இப்படி ஒரு சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது" என ஜாலியாக ருத்துராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐபிஎல் சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நான்காவது முறையாக சிஎஸ்கே கைப்பற்றி அசத்தி இருந்தது. இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது, தொடக்க ஜோடியான ருத்துராஜ் - பாப் டு பிளெஸ்ஸிஸ் தான். ருத்துராஜ் 635 ரன்களும், பாப் டு பிளெஸ்ஸிஸ் 633 ரன்களும் எடுத்து, அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களையும் பிடித்திருந்தனர்.

ஆனால், நடப்பு சீசனில் டு பிளெஸ்ஸிஸை சிஎஸ்கே தக்க வைத்துக் கொள்ளாததால், அவரை பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்து கேப்டனாக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CRICKET, RUTURAJ, FAF DU PLESSIS, ருத்துராஜ், டு பிளெஸ்ஸிஸ், சிஎஸ்கே

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்