"இதுக்கு மேலயும் மறைக்க முடியாது".. தோழியை விரும்புவதாக அறிவித்த பிரபல டென்னிஸ் வீராங்கனை..வைரலாகும் புகைப்படம்.!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரஷ்யாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான டாரியா கசட்கினா தனது தோழியை விரும்புவதாக பொதுவெளியில் அறிவித்திருக்கிறார். இது உலகம் முழுவதும் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
Also Read | வரலாற்றில் முதல் முறை.. கடும் வீழ்ச்சியை சந்தித்த டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு..முழு விபரம்..!
காதல் குறித்த பார்வை உலக அளவில் மாற்றமடைந்துவருகிறது. தங்களுடைய இணைகளை பாலின வேறுபாடு கடந்து தேர்ந்தெடுக்க தங்களது மக்களுக்கு மேற்கத்திய நாடுகள் அனுமதி அளித்துவருகின்றன. ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்ளவும் பல நாடுகள் சட்டங்களை இயற்றியுள்ளன. இருப்பினும் சில நாடுகளில் இதற்கான தடைகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. இதனிடையே திரை பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்களது ஒருபால் காதல் குறித்து வெளியிடுவது உலக அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. அந்த வகையில் ரஷ்யாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான டாரியா கசட்கினா தனது தோழியை விரும்புவதாக அறிவித்திருக்கிறார்.
டென்னிஸ் வீராங்கனை
உலக அளவில் தரவரிசை பட்டியலில் 12 ஆம் இடத்தில் இருக்கிறார் டாரியா கசட்கினா. சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஓப்பன் தொடரில் அரையிறுதி வரை சென்ற டாரியா, சில தினங்களுக்கு முன்னர் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில், தனது தோழி நடாலியா ஜாபியாகோ-வை விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். இருவரும் காதலித்துவரும் நிலையில் புகைப்படம் ஒன்றையும் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் டாரியா. இருவரும் எடுத்துக்கொண்ட அந்த செல்பி புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து பேசிய டாரியா,"மறைவுக்குள் வாழ்வது கடினமானது. அவசியமற்றதும் கூட. உங்களால் நிம்மதியாக வாழ முடியவேண்டும். அதுவே பிரதானமானது. மற்றவர்களை பற்றி கவலைகொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை" என்றார்.
எதிர்ப்பு
ரஷியாவை சேர்ந்த கால்பந்து வீராங்கனையான நாத்யா கார்போவா சமீபத்தில் தன்னுடைய ஒருபால் காதல் குறித்து பொதுவெளியில் பேசியிருந்தார். அதுவே தனக்கு உத்வேகம் அளித்ததாகவும், இன்னும் பலர் ஆசைகளை மறைத்துக்கொண்டு வாழ்கிறார்கள், அவர்கள் அதனை வெளிப்படுத்திட வேண்டும் எனவும் டாரியா தெரிவித்திருக்கிறார்.
இதுபற்றி பேசிய அவர்,"விளையாட்டு அல்லது வேறு எந்தத் துறையிலும் செல்வாக்கு மிக்கவர்கள் உண்மையில் இதைப் பற்றி பேசுவது முக்கியம் என்று நான் நம்புகிறேன். ஆதரவு தேவைப்படும் இளைஞர்களுக்கு இது முக்கியமானது" என்றார்.
ரஷ்யாவில் ஒருபால் காதலுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், பிரபல டென்னிஸ் வீராங்கனையான டாரியா தனது தோழி நடாலியா ஜாபியாகோ-வை விரும்புவதாக அறிவித்திருப்பது உலக அளவில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்
சைடிஷ் வாங்குவதில் வந்த தகராறு.. நண்பர்களின் செயலால் நடுங்கிப்போன மக்கள்.. திருவள்ளூரில் பரபரப்பு..!
தொடர்புடைய செய்திகள்
- இளம்பெண்ணை காதலித்து விட்டு... அவரது தந்தையை கரம்பிடித்த காதலன்!.. திருமணத்துக்கு முன்பாகவே மகள் கொடுத்த அன்பு பரிசு!.. தம்பதியினர் கொண்டாட்டம்!!
- '56 வயது காதலனைக் கொன்ற 27 வயதான ஓரினச்சேர்க்கையாளர்'... விசாரணையில் திடுக்கிடும் தகவல்!... நடந்தது என்ன?
- 'உறவுக்காரப் பெண்ணை காதலிக்கிறேன்'... 'பிரபல இந்திய தடகள வீராங்கனையால் பரபரப்பு'!