தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட 'ரூபா குருநாத்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரான என்.சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மாநில கிரிக்கெட் சங்கங்களில் பெண் ஒருவர் தலைவராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறை. முன்னதாக அனைத்து மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் பொதுக்குழு கூட்டத்தை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடத்தியபோது ரூபா குருநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் 70 வயதைக் கடந்தவர்கள் பதவியில் இருக்கக் கூடாது மற்றும் தொடர்ந்து ஒருவரே 2 முறை பதவி வகிக்கும் பட்சத்தில் ஒருவருட கால இடைவெளிக்கு பின்னரே பதவியில் அமர வேண்டும் உள்ளிட்ட பல புதிய விதிமுறைகளை லோதா கமிட்டி பரிந்துரைத்திருந்தது.
இதன் அடிப்படையில், மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தேர்தல்கள் நடத்தப்பட முடிவு செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மாதம் 23-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அவுட்டா? நானா?...அதெல்லாம் இல்ல..மறுபடியும் 'பந்து' போடுங்க!
- Watch Video: திடீரென 'காதலை' சொல்லிய ரசிகை... 'திகைத்து'ப்போன வீரர்!
- ‘தொடரும் கிரிக்கெட் சூதாட்டப் புகார்கள்’... '34 வீரர்களுக்கு நோட்டீஸ்'!
- இன்னொரு 'டைம்' இப்படி பண்ணீங்கன்னா...அப்புறம் வெளையாட முடியாது!
- Watch Video: பாகிஸ்தானுக்கு எதிரா...தோனி 'சட்டை'யைக் கழட்டுன நாள்!
- 'தலைக்கு நேரா அசுர வேகத்தில் வந்த பந்து'.. 'நூலிழையில் தப்பிய வீரர்' வைரலாகும் வீடியோ..!
- ‘தோனியின் மாஸ் சாதனையை சமன் செய்த ரோஹித் ஷர்மா’.. ‘கோலி கூட இன்னும் அத பண்ணல’ அது என்ன தெரியுமா..?
- ‘4 மணிநேரம் லேட்’ ‘இந்தியாவுக்கு போகுற ப்ளைட்ட மிஸ் பண்ண போறேன்’.. பரபரப்பை ஏற்படுத்திய பிரபல வீரரின் ட்வீட்..!
- ‘இவன் இளவட்டமும் கிடையாது’... ‘தனக்குத் தானே பேசிக்கிறான்’... ‘தவானின் விநோத செயலை’... ‘வீடியோ எடுத்து வெளியிட்ட ரோகித்’!
- ‘சென்னையில் கிரிக்கெட் விளையாடிய கப்பற்படை வீரர்’.. நெஞ்சில் பந்து பட்டு பலியான சோகம்..!