நாங்க தோத்தா 'வீட்ட' கொளுத்திடுவாங்க! மோசமா விளையாடினா 1.5 கோடி ரூபாய் தர்றேன்.. ஷேன் வார்ன்-டம் சொன்ன முன்னாள் வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் மோசமாக ஆட வேண்டும் என ரூ 1.5 கோடி லஞ்சம் கொடுக்கப் பார்த்ததாக ஆஸ்திரேலிய வீரரான ஷேன் வார்ன் பரபரப்பு சம்பவத்தை தற்போது கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை பொறுத்தவரை ஒரு சில வீரர்களுக்கு அதிக சம்பளமும், ஒரு சிலருக்கு மிகவும் குறைவான சம்பளமும் கொடுக்கப்படும். இதன் காரணமாக புதிதாக வரும் வீரர்களில் சிலர் சூதாட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகி விடுவர். ஆனால் பாகிஸ்தானில் முதன் முதலில் இதை தொடங்கி வைத்தவர் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சலீம் மாலிக்தான்.

அமேசான் பிரைம்மில் 'ஷேன்' என்ற ஒரு டாக்குமெண்டரி:

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய வீரரான ஷேன் வார்ன் குறித்து அமேசான் பிரைம்மில் 'ஷேன்' என்ற ஒரு டாக்குமெண்டரி உருவாக்கப்பட்டு வருகிறது. அதில், ஷேன் வார்ன் கூறிய போது, சலீம் மாலிக்குக்கும் தனக்கு நடந்த உரையாடலை கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில், ஆஸ்திரேலியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 1994 ஆம் ஆண்டு கராச்சியில் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. போட்டியின் நான்காம் நாள் முடிவில் சலீம் மாலிக் தன்னைப் பார்க்க வேண்டும் என்று கூறியதாகவும், அப்போது, தான் நாங்கள் வெற்றி பெறும் நிலையில் இருக்கிறோம் என வார்னர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

எங்கள் வீடுகள் கொளுத்தப்படும்:

அதற்கு சலீம் மாலிக், ‘நாங்கள் தோற்க முடியாது, பாகிஸ்தானில் தோற்றோம் என்றால் எங்கள் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்படும். எங்கள் குடும்பத்தினர் அவதூறு செய்யப்படுவர், அவர்கள் வீடுகளும் எரிக்கப்படும்' என்றார். சலீம் இவ்வாறு கூறிய போது எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. உங்கள் வேலையைப் பாருங்கள் எப்படியிருந்தாலும் நாங்கதான் ஜெயிக்கப் போறோம்னு சொன்னேன்.

என்ன இப்படி இருக்காங்க?

அப்போது சலீம் மாலிக் அணியின் சக வீரட் டிம் மேவுக்கு வைடாக வீசவும், விக்கெட் எடுக்க முயற்சி செய்யவில்லை என்றால் 2,76,000 டாலர்கள் எனக்கு தருவதாகவும் ஆசைக்காட்டினார். இன்று நாம் மேட்ச் பிக்சிங் பற்றி பெரிதாகப் பேசுகிறோம், ஆனால், அப்போது எனக்கு இது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. சலீம் மாலிக் என்னிடம் லஞ்சம் குறித்து பேசும் போது ‘என்ன இப்படி இருக்காங்க’ என்று தான் தோன்றியது' என வார்ன் கூறியுள்ளார்.

அதன் பின் சலீம் மாலிக் பிற்பாடு 2000-ம் ஆண்டில் கிரிக்கெட் சூதாட்டத்தினால் ஆயுள் தடை விதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

CRICKET, SHANE WARNE, RS 1.5 CRORE, BRIBE, சலீம் மாலிக், ஷேன், ஷேன் வார்ன், லஞ்சம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்