"இன்னைக்கி சம்பவம் இருக்கு போல",,.. எதிர்பார்ப்பில் 'ஐபிஎல்' ரசிகர்கள்,,... டாஸ் வென்றது யார்??,.. அணியின் முழு விவரம் உள்ளே:

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் மோதுகின்றன.

"இன்னைக்கி சம்பவம் இருக்கு போல",,.. எதிர்பார்ப்பில் 'ஐபிஎல்' ரசிகர்கள்,,... டாஸ் வென்றது யார்??,.. அணியின் முழு விவரம் உள்ளே:

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இரண்டு அணிகளுமே பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பலம் வாய்ந்த அணிகளாக உள்ளன. முதல் போட்டியில் டெல்லி அணியிடம் நூலிழையில் தோல்வியை தழுவிய பஞ்சாப் அணி, தங்களது இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூர் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய பஞ்சாப் கேப்டன் கே.எல். ராகுல் சதமடித்து பல்வேறு சாதனைகளை நொறுக்கித் தள்ளினார். இன்றும் சிறந்த ஸ்கோரை எட்ட வேண்டும் என ராகுல் தெரிவித்துள்ளார். பஞ்சாப் அணியை எதிர்கொள்ளும் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே ஆடியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. அந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

அது மட்டுமில்லாமல் இன்றைய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் இணைந்திருப்பது அணிக்கு இன்னும் பலம் சேர்க்கும். இதனால் இன்று நடைபெறும் போட்டியில் அதிரடிக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் அணி ஆடும் லெவன் :

கேஎல் ராகுல், மாயங்க் அகர்வால், நிக்கோலாஸ் பூரான், கருண் நாயர், சர்பராஸ் கான், கிளென் மேக்ஸ்வெல், ஜேம்ஸ் நீஸாம், முருகன் அஸ்வின், ஷெல்டன் கோட்றல், ரவி பிஷ்னாய், முகமது ஷமி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆடும் லெவன் :

ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், ராபின் உத்தப்பா, ராகுல் தேவாட்டியா, டாம் குர்ரான், ரியான் பரக், ஷ்ரேயாஸ் கோபால், ஜோப்ரா ஆர்சர், ஜெய்தேவ் உனத்கட், அன்கித் ராஜ்பூட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்