ஆத்தீ..! வந்த முதல் பாலே காலி.. தெறித்த ஸ்டம்ப்.. RCB-ஐ அலறவிட்ட RR இளம் பவுலர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூரு அணிக்கு எதிரான ப்ளே ஆப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அபாரமான பந்து வீச்சு வெளிப்படுத்தினார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் இரண்டாவது ப்ளே ஆப் போட்டி இன்று (27.05.2022) அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 58 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை பிரசித் கிருஷ்ணா மற்றும் ஓபேட் மெக்காய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் மற்றும் டிரென்ட் போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து பிரசித் கிருஷ்ணா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக போட்டியின் 19-வது ஓவரின் முதல் பந்தில் தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டை சாய்த்தார். இதனை அடுத்து களமிறங்கிய ஹசரங்காவை போல்ட்டாக்கி வெளியேற்றினார். பிரசித் கிருஷ்ணா வீசிய அந்த யாக்கரில் இரண்டு ஸ்டம்புகள் கீழே விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RCB, RR, IPL, PRASIDH KRISHNA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்