KKR பேட்ஸ்மேனுக்கும், RR பவுலருக்கும் இடையே நடந்த வாக்குவாதம்.. மேட்ச் ரொம்ப பரபரப்பாக இருந்திருக்கு போலயே..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணி வீரர் ஆரோன் பின்ச் மற்றும் ராஜஸ்தான் அணி வீரர் பிரஷித் கிருஷ்ணா கோபமாக பேசிக்கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ‘7 முறை உயிர் தப்பிய இளைஞர்’.. ‘நீயா’ படம் மாதிரி துரத்தி, துரத்தி பழி வாங்கும் பாம்பு?!.. அதிர வைக்கும் பின்னணி..!

ஐபிஎல் தொடரின் நேற்றைய 30-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 217 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் 103 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 19.4 அவர்களின் 210 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 85 ரன்களும், ஆரோன் பின்ச் 58 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை சஹால் 5 விக்கெட்டுகளும், ஓபேட் மெக்காய் 2 விக்கெட்டுகளும், அஸ்வின் மற்றும் பிரஷித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில் இப்போட்டியில் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்சிடம் ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா கோபமாக பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் போட்டியின் 9-வது வரை பிரஷித் கிருஷ்ணா வீசினார். அந்த ஓவரில் கடைசி பந்தை எதிர்கொண்ட ஆரோன் பின்ச், கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இதனை அடுத்து பெவிலியன் திரும்பியபோது பிரஷித் கிருஷ்ணனைப் பார்த்து ஆரோன் பின்ச் ஏதோ கூறினார். இதனால் கோபமடைந்த பிரஷித் கிருஷ்ணாவும் முறைத்தபடியே ஏதோ கூறினார். அந்த ஓவரில் ஆரோன் பின்ச் 2 பவுண்டரிகள் விளாசினார். மேலும் 3 சிங்கிள், 2 வைடு உட்பட14 ரன்கள் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | ‘இவர் இப்படி கோவப்பட்டு பார்த்ததே இல்லயே’.. தமிழக வீரரை கடுமையாக சாடிய கேப்டன்.. அப்படி என்ன நடந்தது..?

 

CRICKET, IPL, IPL 2022, RR VS KKR, PRASIDH KRISHNA, AARON FINCH, BRABOURNE STADIUM, MUMBAI, ஆரோன் பின்ச், பிரஷித் கிருஷ்ணா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்