8 மேட்ச்ல ‘3 தான்’ வின்.. தினேஷ் கார்த்திக்கை தொடர்ந்து ‘அந்த’ டீம் கேப்டனும் ‘ராஜினாமா’ பண்ண போறாரா..? சர்ச்சையை கிளப்பிய ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் ராஜினாமா செய்துள்ள நிலையில் ராஜஸ்தான் கேப்டனும் பதவி விலக போவதாக இணையத்தில் செய்திகள் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது.

கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பதவியில் இருந்து விலகுவதாக முடிவு எடுத்துள்ளார். இது தொடர்பாக கொல்கத்தா அணி நிர்வாகத்திற்கு தினேஷ் கார்த்திக் கடிதம் எழுதினார். இவரின் ராஜினாமாவை கொல்கத்தா அணி நிர்வாகம் ஏற்றுக்கொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக இயான் மோர்கன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக இணையத்தில் செய்திகள் வெளியானது. அவருக்கு பதிலாக ஜோஸ் பட்லர் பதவி ஏற்க போகிறார் என்றும் செய்திகள் பரவின. இது சரியாக தினேஷ் கார்த்திக் ராஜினாமா செய்த அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி பட்லரின் புகைப்படத்தை பதிவிட்டது. இதன் காரணமாக ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து விலக போவதாக வதந்திகள் பரவின.

இந்த சீசனில் ராஜஸ்தான் 8 போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. ராஜஸ்தான் அணியின் கேப்டன்சி சரியில்லை என்றும், ஸ்டீவ் ஸ்மித் பேட்ஸ்மேனாகவும் சரியாக பார்மில் இல்லை என்றும், அதனால்தான் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டார் என்றும் பொய்யான தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் இந்த சர்ச்சைக்கு ராஜஸ்தான் அணி விளக்கம் கொடுத்துள்ளது. தவறான புகைப்படத்தால் வதந்தி பரவி வருகிறது என ராஜஸ்தான் அணி விளக்கம் கொடுத்தது. பின்னர் சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் வகையில் ஸ்டீவ் ஸ்மித் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து அவரை கேப்டன் என்று குறிப்பிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்