ஒருத்தருக்கு கொரோனா ‘பாசிடீவ்’-னு வந்ததும் ஐபிஎல் நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை.. ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பகிர்ந்த ‘பயோ பபுள்’ அனுபவம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய முஸ்தாபிசுர் ரஹ்மான், பயோ பபுளில் இருந்தது குறித்து பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற 14-வது சீசன் ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்தது. அதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கு முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தது. அதனால் சிஎஸ்கே வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் சென்னை அணியி பவுலிங் பயிற்சியாளர் எல்.பாலஜிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவரைத் தொடர்ந்து சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சாஹா, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அமித் மிஸ்ரா என அடுத்தடுத்து வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து தேதி குறிப்பிடாமல் ஐபிஎல் தொடரை ஒத்துவைத்து பிசிசிஐ அறிவிப்பை வெளியிட்டது.
இந்த நிலையில் வங்கதேச வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடியவருமான முஸ்தாபிசுர் ரஹ்மான், பயோ பபுள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ‘ஐபிஎல் தொடர், ஒவ்வொரு நாளும் சோர்வாகவும், கடினமாகவும் இருந்தது. ஹோட்டலில் இருந்து நேராக மைதானம், பின்னர் மறுபடியும் ஹோட்டல் என எத்தனை நாள் இப்படியே இருக்க முடியும்?’ என முஸ்தாபிசுர் ரஹ்மான் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘ஐபிஎல் அணி ஒன்றில் வீரர் ஒருவருக்கு கொரோனா பாசிடீவ் என வந்ததும், நாங்கள் அனைவரும் தனித்தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டோம். கிட்டத்தட்ட 5-6 நாட்கள் ஒரு அறைக்குள்ளேயே தான் இருந்தோம். இதன்பின்னர் தான் நாங்கள் வீட்டுக்கு பயணம் செய்ய விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போதும் வீட்டில் தனிமைப்படுத்தலில் தான் இருக்கிறேன்’ என அவர் முஸ்தாபிசுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'உன்னைய தான் தம்பி தேடிட்டி இருந்தேன்... எப்படிய்யா உன்னால இதெல்லாம் முடியுது'!.. இந்த ஐபிஎல் கண்டெடுத்த சூப்பர் ஹீரோ!.. ஆகாஷ் சோப்ரா நெகிழ்ச்சி!!
- தோனி, ரோகித், கோலி, பும்ரா... ஜாம்பவான்கள் யாருமே இல்லாத... ஒரு 'சூப்பர் டூப்பர்' டீமை தயார் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!.. எப்படி?
- 'என்னோட மனசு முழுக்க அங்கேயே தான் இருக்கு'!.. இந்தியா குறித்து... வேதனை தாங்காமல் கெவின் பீட்டர்சன் உருக்கம்!
- 'எங்க நாட்டுல உள்ள ப்ளேயர்ஸ் இனி திருப்பி வர்றது கஷ்டம் தான்...' 'ஏன் அப்படி சொல்றேன்னா...' - பீதிய கெளப்பும் முன்னாள் வீரர்...!
- VIDEO: நீங்க இப்படி உடைஞ்சு போய் ‘அழுகுறத’ இப்போதான் பாக்குறோம்.. ‘யுனிவெர்ஸ் பாஸ்’-க்காக உருகிய ரசிகர்கள்..!
- ‘அவங்க நான் சொல்றத கேட்கவே மாட்டாங்க’!.. சீனியர் வீரர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு.. அதிர வைத்த மும்பை அணியின் ஃபீல்டிங் கோச்..!
- ‘நாடு இப்போ இருக்குற நிலைமையில அதுக்கு வாய்ப்பே இல்ல’!.. ஐபிஎல் தொடர் குறித்து கங்குலி ‘முக்கிய’ தகவல்..!
- ‘ப்ரோ இது அவங்கன்னு நெனச்சு என்னை டேக் பண்ணிட்டீங்க’!.. பேட் கம்மின்ஸ் செய்த ஒரு மிஸ்டேக்.. ட்விட்டரில் நடந்த கலகலப்பு..!
- திடீரென ஒத்திவைக்கப்பட்ட ‘ஐபிஎல்’ தொடர்.. Star Sports வெளியிட்ட ஒற்றை அறிவிப்பு.. ‘செம’ குஷியில் முதலீட்டாளர்கள்..!
- VIDEO: ‘குழந்தைகளுக்கு 3-4 நாளா காய்ச்சல்’!.. ‘அப்பாவுக்கு ஆக்ஸிஜன் அளவு குறைஞ்சிட்டே இருந்துச்சு’.. அஸ்வின் அவசர அவசரமாக வீடு திரும்பியதற்கு பின்னால் இருக்கும் சோகக்கதை..!