VIDEO: ‘மனசுல நின்னுட்டீங்க தலைவா..!’.. ஷூ லேஸை கட்டிவிட்டது யார் தெரியுமா..? வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்தது.

அதிகபட்சமாக சிவம் தூபே 46 ரன்களும் (5 பவுண்டரி 2 சிக்சர்), ராகுல் திவேட்டியா 40 ரன்களும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். பெங்களூரு அணியைப் பொறுத்தவரை முகமது சிராஜ் மற்றும் ஹர்சல் பட்டேல் 3 விக்கெட்டுகளும், கைல் ஜேமிசன், கேன் ரிச்சர்ட்சன் மற்றும் வாசிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி, 16.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் அடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக இளம்வீரர் தேவ்தத் படிக்கல் 101 ரன்களும், கேப்டன் விராட் கோலி 72 ரன்களும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து அசத்தினர்.

இந்த நிலையில் இப்போட்டியின் நடுவே, பெங்களூரு வீரர் தேவ்தத் படிக்கலின் ஷூ லேஸ் கழன்று விட்டது. அப்போது அங்கு வந்த ராஜஸ்தான் அணி வீரர் ஜாஸ் பட்லர் ஷூ லேஸை கட்டிவிட்டுச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், இதுதான் உண்மையான ‘Spirit of Cricket’ என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்