“அஸ்வீன் வீசுன அந்த ஒரு ஓவர்தான் RR தோக்கவே காரணம்!”.. முன்னாள் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீசிய அந்த ஒருவர் தான் ராஜஸ்தன் அணி தோல்வி பெறக் காரணம் என முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 70 ரன்களும், ஹெட்மையர் 42 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 44 ரன்களும், சபாஷ் அகமது 45 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் தோல்வி அடைய அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்தான் காரணம் என முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்லஸ் ப்ரேத்வைட் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய அந்த ஒரு ஓவர்தான் ராஜஸ்தான் தோல்விக்கு காரணம். புதிய பந்தை பயன்படுத்தி ஆரம்பகட்டத்திலேயே விக்கெட்டுகளை எடுக்க ராஜஸ்தான் தவறிவிட்டது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடினார் அதன் பின்னர் ஒருசில விக்கெட்டுகள் விழுந்தால் அந்த அணியால் வெற்றி பெற முடிந்தது’ என அவர் கூறியுள்ளார்.

இப்போட்டிகள் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி, திடீரென அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதனால் 10 ஓவர்களுக்கு உள்ளாகவே 4 விக்கெட்டுகளை பெங்களூரு அணி இழந்தது. இந்த சமயத்தில் இப்படி சேர்ந்த சபாஷ் அகமது, தினேஷ் கார்த்திக் கூட்டணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனாலும் ஆட்டம் ராஜஸ்தானின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அப்போது அஸ்வின் வீசிய 14-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 3 பவுண்டரி 1 சிக்சர் விளாசினார். அதனால் அந்த ஓவரில் 21 ரன்கள் சென்றது. இதுதான் ஆட்டத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி பெங்களூரின் பக்கம் ஆட்டம் திரும்பியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்