"இதுக்கு மேல தாங்க முடியாதுடா சாமி.." 'ராஜஸ்தான்' அணிக்கு காத்திருந்த வேற லெவல் 'அதிர்ச்சி'.. "ரொம்ப பெரிய 'சிக்கல்'ல மாட்டிட்டாங்களே!!"
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் தொடரில், இதுவரை 16 போட்டிகளில் நடந்து முடிந்துள்ள நிலையில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ள ராஜஸ்தான் அணி, ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளில், தொடர்ந்து தடுமாற்றம் காணும் ராஜஸ்தான் அணிக்கு, வேறு ஒரு சிக்கலும் புதிதாக உருவாகி வருகிறது. அந்த அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes), பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில், காயமடைந்த நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகினார்.
இதனைத் தொடர்ந்து, மற்றொரு இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான லியாம் லிவிங்ஸ்டனும் ஐபிஎல் தொடரில் இருந்து பாதியில் விலகினார். கடந்த ஒரு ஆண்டாக பயோ பபுலில் உள்ளதால், குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக, லியாம் லிவிங்ஸ்டன் விலகியதாக தெரிவித்தார். மேலும் லிவிங்ஸ்டனின் முடிவையும், ராஜஸ்தான் நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில், ராஜஸ்தான் அணியில் இருந்து, மிக முக்கியமான வீரர் ஒருவர் தற்போது விலகியுள்ளது, அந்த அணிக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு (Jofra Archer), இந்திய அணியின் தொடருக்கு முன்பாக கையில் காயம் ஏற்பட்டிருந்தது. இந்த காயம், இந்திய தொடரின் போது பெரிதானதால், அவர் மீண்டும் இங்கிலாந்து கிளம்பிச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பாரா மாட்டாரா என்பதில் சந்தேகம் இருந்து வந்த நிலையில், சில போட்டிகளுக்கு பிறகு, ராஜஸ்தான் அணியுடன் அவர் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால், ஆர்ச்சர் காயம் குறித்து, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மீண்டும் ஆர்ச்சர் பந்து வீசும் பயிற்சியை மேற்கொண்ட நிலையில், இன்னும் அவர் முன்னேற்றம் அடைய வேண்டுமென கூறப்படுகிறது. மேலும், அடுத்த வாரம் தனது கவுண்டி அணியான சசெக்ஸ்ஸுடன் இணைந்து, மீண்டும் அவர் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபடுவார். அப்போது, அவர் வலி இல்லாமல் நல்லபடி பந்து வீசினால், 15 நாட்கள் கழித்து, அவர் கிரிக்கெட் விளையாட தயாராவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இதனால், அவர் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆர்ச்சர் மற்றும் ஸ்டோக்ஸ் போன்ற முக்கிய வீரர்கள், ராஜஸ்தான் அணியில் இருந்து விலகியுள்ளது, அந்த அணிக்கு மிகப் பெரிய நெருக்கடியைக் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், மிகவும் மதிப்புமிக்க வீரராக (Most Valuable Player) ஜோஃப்ரா ஆர்ச்சர் தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தோனி'யை குறிப்பிட்டு ராஜஸ்தான் அணி போட்ட 'ட்வீட்'!.. "இன்னைக்கி இதான் செம 'டிரெண்டிங்' போங்க.." கொண்டாடித் தீர்த்த 'சிஎஸ்கே' ரசிகர்கள்!!
- "ஏன் அவருக்கு 'சான்ஸ்' கொடுக்கல.. நீங்க என்ன தான் நெனச்சிட்டு இருக்கீங்க??.." 'ஐபிஎல்' அணியின் முடிவால் கடுப்பான 'வாகன்'!!
- "உங்களோட 'ஃகிப்ட்'க்கு நன்றி 'சாம்சன்'.." 'மோகன்லால்' போட்ட 'ட்வீட்'.. மெய் சிலிர்த்து போன ராஜஸ்தான் 'கேப்டன்'!!
- "அவன் 'தம்பி' இறந்த விஷயத்த கூட சொல்லாம மறச்சுட்டோம்.. '10' நாள் கழிச்சு அவனுக்கு தெரிஞ்சதும், என்ன ஆச்சு தெரியுமா??.." இளம் வீரரின் வாழ்க்கையில் நடந்த 'சோகம்'.! - கண்ணீருடன் பகிர்ந்த தாய்!
- "வாழ்க்கை முழுக்க கஷ்டம் தான்.. ஆனா இன்னைக்கி 'ஐபிஎல்' நல்ல 'entry' குடுத்துருக்கு.." முதல் வாய்ப்பில் முத்திரை பதித்த 'இளம்' வீரர்.. மனதை உருக வைக்கும் 'கதை'!!
- "உங்களுக்கு எல்லாம் 'பணம்' தான் முக்கியம்.." 'ஸ்டோக்ஸ்' மீது சீறிய ரசிகரால் எழுந்த 'பரபரப்பு'!.. இறுதியில் காத்திருந்த 'ட்விஸ்ட்'!!
- "ஹனிமூனுக்கு இந்த இடம் போங்க... சூப்பரா இருக்கும்..." 'பும்ரா' - 'சஞ்சனா' ஜோடிக்கு 'ஐடியா' கொடுத்த ஐபிஎல் 'அணி'!!. "எப்படி எல்லாம் யோசிக்குறாய்ங்க??"
- "என்ன பத்தி என்ன தெரியும் உங்களுக்கு??.. இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்கீங்க!!.." வாகனுக்கு வேற லெவலில் 'பதிலடி' கொடுத்த இங்கிலாந்து 'வீரர்'.. 'பரபரப்பு' சம்பவம்!!
- பிரபல 'ஐபிஎல்' அணி கேட்ட 'கேள்வி'... இரண்டே வார்த்தையில் 'ஜடேஜா' போட்ட 'கமெண்ட்'.. இதான் இப்போ செம 'வைரல்'!!
- 'ஐபிஎல்' வரை சென்ற 'வாத்தி கம்மிங்'... பிரபல 'டீம்' ஷேர் செய்த அசத்தல் 'வீடியோ'... இப்போ இது தான் செம 'டிரெண்டிங்'!!