எந்த அணியும் செய்யாத ‘மாபெரும்’ செயல்.. திரும்பிப் பார்க்க வைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்.. குவியும் பாராட்டு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடரின் 14-வது சீசன் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 23 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன.

இதில் 10 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது இடத்திலும், 8 புள்ளிகளுடன் டெல்லி அணி மூன்றாவது இடத்தில் உள்ளன. அதேபோல் 4 புள்ளிகளுடன் மும்பை அணி அணி நான்காவது இடத்திலும், கொல்கத்தா அணி ஐந்தாவது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் ஆறாவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் ஏழாவது இடத்திலும் உள்ளன. மேலும் இதுவரை விளையாடி 6 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணி கடைசி இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (29.04.2021) ஐபிஎல் தொடரின் 24-வது லீக் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்ஸிஜன் வாங்குவதற்காக 1 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் 7 கோடியே 40 லட்சம் ரூபாய்)  நன்கொடையாக அறிவிப்பதாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக கொல்கத்தா அணியில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் (Pat Cummins) 50 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 37 லட்சம்) வழங்கினார். இவரை தொடர்ந்து மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான பிரட் லீ (Brett Lee) 1 பிட் காயின் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 40 லட்சம்) வழங்கினார். தற்போது ஐபிஎல் அணிகளில் முதல் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்