VIDEO: இது என்னய்யா ‘வித்தியாசமான’ ஆசையா இருக்கு.. மறுபடியும் ‘அதே’ மாதிரி செஞ்ச சஞ்சு சாம்சன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் 12-வது லீக் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

VIDEO: இது என்னய்யா ‘வித்தியாசமான’ ஆசையா இருக்கு.. மறுபடியும் ‘அதே’ மாதிரி செஞ்ச சஞ்சு சாம்சன்..!

14-வது ஐபிஎல் சீசனின், இன்றைய (19.04.20210 ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் (CSK), சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

RR captain Sanju Samson keeps the toss coin with him yet again

இந்த இரு அணிகளும் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றுள்ளன. அதனால் இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற முனைப்பு காட்டும் என தெரிகிறது. அதேபோல் இரண்டு அணிகளும், அணியில் எந்தவித மாற்றமும் இன்றி களம் காணுகின்றன.

RR captain Sanju Samson keeps the toss coin with him yet again

இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன், டாஸ் போடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியும், ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் கேப்டன் சஞ்சு சாம்சனும் மைதானத்துக்கு வந்தனர். அப்போது டாஸ் போடும் நாணயத்தை தோனி சுண்டி விட்டார். இதனை அடுத்து உடனடியாக அந்த நாணயத்தை சஞ்சு சாம்சன் எடுத்து வைத்துக் கொண்டார்.

இந்த வருட ஐபிஎல் தொடரில் முதல் முறையாக கேப்டனாக களம் காணும் சஞ்சு சாம்சன், தன்னுடைய முதல் போட்டியான பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் இதேபோல் டாஸ் போடும் நாணயத்தை எடுத்துக் கொண்டார். போட்டி முடிந்த பின் இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது பதிலளித்த அவர், ‘நாணயம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. நான் எடுத்துக் கொள்ளலாமா என ரெஃப்ரியிடம் கேட்டேன். அவர் முடியாது என மறுத்துவிட்டார். அதனால் நான் டாஸ் போட்ட உடன் எடுத்துக் கொண்டேன்’ என சஞ்சு சாம்சன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்றும் அதேபோல் அவர் டாஸ் நாணயத்தை எடுத்தது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்