"ஜடேஜா'வுக்கு இப்டி பண்ணிட்டீங்களே.. மொத்தமா முடிச்சு விட்டீங்க.." 'CSK'-வை விமர்சித்த முன்னாள் வீரர்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஏறக்குறைய பிளே ஆப் சுற்று வாய்ப்பினை இழந்து விட்டதாகவே தெரிகிறது.

Advertising
>
Advertising

இதுவரை, 10 போட்டிகள் ஆடியுள்ள சிஎஸ்கே, அதில் மூன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இனியுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றாலும், அடுத்த சுற்று என்பது கடினமான ஒன்று தான்.

முன்னதாக, ஐபிஎல் போட்டிகள் ஆரம்பம் ஆவதற்கு முன்பாக, சிஎஸ்கேவின் கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொண்டார் தோனி.

மங்கிய பிளே ஆப் வாய்ப்பு..

இதனால், சிஎஸ்கேவின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா பதவியேற்றுக் கொண்டார். முதல் நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த சென்னை அணி, பின்னர் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் முதல்  வெற்றியை பதிவு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து, மும்பை அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்த சிஎஸ்கே, முதல் 8 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் தான் வெற்றி பெற்றிருந்தது.

மீண்டும் கேப்டனான தோனி

இதனையடுத்து, சிஎஸ்கேவின் கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலகிக் கொள்ள, மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் தோனி. இனிமேல், தோனியை கேப்டனாக பார்க்க மாட்டோம் என கருதி இருந்த ரசிகர்கள், சிஎஸ்கேவின் முடிவால் கடும் உற்சாகம் அடைந்தனர். பலரும், தோனியை கேப்டனாக பார்க்க ஆவலாகவும் இருந்தனர்.

தொடர்ந்து, ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி தலைமையில் களமிறங்கிய சிஎஸ்கே, அதில் வெற்றியும் கண்டது. இதற்கு அடுத்தபடியாக, பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே, நல்ல தொடக்கத்தை தந்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

விமர்சித்த பிரபலங்கள்

ரசிகர்கள் தோனியின் கேப்டன்சி கம்பேக்கை கண்டு மகிழ்ச்சி அடைந்தாலும், கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் சிஎஸ்கேவின் முடிவை விமர்சனம் செய்துள்ளனர். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர் பி சிங், சிஎஸ்கே முடிவு பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

"தோனி இருக்கும் போது, வேறொருவர் கேப்டனாக இருந்தால், அந்த கேப்டனாக இருக்கும் நபர் அதிக அளவுக்கு நெருக்கடியை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனென்றால், அங்கு தோனி இருக்கிறார். அவர் சிறந்த முறையில் வழி நடத்தவும் செய்வார். தோனி மீண்டும் கேப்டன் ஆனது நல்ல முடிவு தான். ஆனால், ஜடேஜாவை அப்படி பாதியில் விட்டிருக்கக் கூடாது.

ஜடேஜா நம்பிக்கையே போச்சு..

நீங்கள் அவரை கேப்டன் ஆக்கி விட்டீர்கள். பின்னர் அவரை ஒரு சீசன் முழுவதும் நீங்கள் நம்பி இருக்க வேண்டும். இப்படி பாதியில் அவரை பதவியில் இருந்து மாற்றக் கூடாது. எப்போதாவது கேப்டனாக வர முடியும் என்ற ஜடேஜாவின் நம்பிக்கையை நீங்கள் முடிவுக்கு கொண்டு வந்து விட்டீர்கள்" என தெரிவித்துள்ளார்.

அதே போல, சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் தோனி இணைந்து, ருத்துராஜ் அல்லது வேறு யாரையாவது சிஎஸ்கே கேப்டனாக நியமிப்பது பற்றி யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் ஆர் பி சிங் குறிப்பிட்டுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

MSDHONI, RAVINDRA JADEJA, CSK, RP SINGH, ஆர் பி சிங், ஜடேஜா, தோனி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்