"ஜடேஜா மட்டும் அத கரெக்ட்டா பண்ணி இருந்தா 'CSK' கூட 'Win' பண்ணி இருக்கலாம்.." அடித்துச் சொல்லும் முன்னாள் வீரர்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Advertising
>
Advertising

இதுவரை 8 போட்டிகள் ஆடியுள்ள சிஎஸ்கே, அதில் இரண்டில் மட்டும் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது.

மீதமுள்ள ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றால் தான், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உருவாகும் என்ற இக்கட்டான சூழ்நிலை உள்ளது.

முன்னேற்றம் கண்ட பஞ்சாப் கிங்ஸ்

இதனால், இனிவரும் போட்டிகள் அனைத்திலும் சிஎஸ்கே மிக மிக கவனமாக செயல்பட வேண்டும் என்ற நிலையில் உள்ளனர். சென்னைக்கு எதிரான போட்டியில், வெற்றி பெற்றதன் மூலம், பஞ்சாப் அணி 8 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் 6 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ், 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 88 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கேவில், ராயுடு மட்டும் அதிரடி காட்டி ஆடினார். போட்ட பந்துகள் அனைத்தும் சிக்ஸர் மற்றும் பவுண்டரிக்கு பறந்தது.

ராயுடு அவுட் ஆனதும் முடிஞ்சு..

39 பந்துகள் சந்தித்த ராயுடு, 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், அவர் ரபாடா பந்து வீச்சில் ஆட்டமிழந்ததும் போட்டியின் நிலை மாறியது. 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே சென்னை அணி எடுத்திருந்தது. இந்நிலையில், சென்னை அணியின் தோல்விக்கான காரணம் பற்றி முன்னாள் வீரர் ஆர்பி சிங், ஜடேஜாவை விமர்சித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜடேஜா மட்டும் அத பண்ணி இருந்தா..

சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து, கடைசி வரை களத்தில் இருந்தார். அதிலும், முதல் 14 பந்துகளில் 14 ரன்களை தான் அவர் எடுத்திருந்தார். இது பற்றி பேசிய ஆர்பி சிங், "ஜடேஜாவின் ஸ்ட்ரைக் ரேட் சிறந்ததாக இல்லை. அவர் இன்னும் வேகமாக ரன் அடித்திருந்தால், கடைசி ஓவரில் 17 முதல் 18 ரன்களை சென்னை அணி அடித்திருக்க வேண்டும் என்ற நிலை உருவாகி இருக்கும்.

ராயுடு நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். ஆனால், மற்ற எந்த சிஎஸ்கே வீரர்களும் அப்படி ஆடவில்லை. ஒரே ஒரு வீரர் மட்டும் அதிரடியாக ஆடுவதால் இலக்கை நீங்கள் நெருங்க முடியும். ஆனால், நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால், அது போன்று மூன்று அல்லது நான்கு வீரர்கள் ஆட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

ஆர்பி சிங் கூறியது போல, ஒரு வேளை ஜடேஜா ஆரம்பத்திலேயே வேகமாக ரன் அடித்திருந்தால், நிச்சயம் போட்டியின் முடிவு கூட மாறி இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

RAVINDRA JADEJA, MSDHONI, CHENNAI-SUPER-KINGS, IPL 2022, RP SINGH, CSK VS PBKS, ரவீந்திர ஜடேஜா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்