அவரு போனா என்ன...! இப்போ நாங்க புது ஆள 'சிஎஸ்கே-ல' இருந்து புடிச்சிட்டோம்...! 'வேற லெவல்' கொண்டாட்டத்தில் ஆர்சிபி ரசிகர்கள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிஎஸ்கே ஆல்ரவுண்டரைத் தேர்வு செய்துள்ளது.

2021ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டிக்கள் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக ஐபில் தொடரில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் பலர் தங்கள் சொந்த நாடுகளை நோக்கி திரும்புகின்றனர்.

குறிப்பாக ஆர்சிபி அணி வீரர்களான கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸாம்பா ஆகிய இருவரும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகி இருப்பதால், ஆர்சிபி அணி மாற்று வீரர்களை தேடி வருகிறது.

இந்நிலையில் மும்பை அணியில் மாற்று வீரராக உள்ள நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஸ்காட் குகலைனை கேன் ரிச்சர்ட்சனுக்குப் பதிலாகத் தேர்வு செய்துள்ளது ஆர்சிபி அணி.

தற்போது தேர்வு செய்துள்ள குகலைன் நியூசிலாந்து அணிக்காக, 2 ஒருநாள், 16 டி20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். அதோடு 2019-ல் சிஎஸ்கே அணியில் இடம்பெற்ற குகலைன், இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடியதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்