கடைசிப்போட்டி.. மைதானத்துலயே கண்கலங்கிய ராஸ் டெய்லர் - பரவும் நெகிழ்ச்சி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வங்கதேசம் அணியுடனான டெஸ்ட் தொடரின் இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியின் மூத்த வீரரும் வலதுகை பேட்ஸ்மேனுமான ராஸ் டெய்லர் மைதானத்திலேயே கண்கலங்கிய வீடியோ இப்பொது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

Advertising
>
Advertising

டெஸ்ட் தொடர்

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது 2 மேட்ச்களைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வங்கதேசம் வெற்றிபெற்றதைத்  தொடர்ந்து, ஹேக்லி ஓவல் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

கடைசிப்போட்டி

முன்னரே வங்கதேச அணியுடனான தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக ராஸ் டெய்லர் அறிவித்திருந்தார். இந்நிலையில் மேட்ச் துவங்குவதற்கு முன்னர், தேசிய கீதம் இசைக்கும் நிகழ்வில் வீரர்கள் அணிவகுக்க, அப்போது ராஸ் டெய்லர் கண்கலங்கினார். உடனேயே சக வீரர்கள் அவருக்கு ஆறுதல் கூறியதைக் கண்டு மைதானத்தில் இருந்த அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

"இதய தானம் கிடைக்கல".. பன்றியின் இதயத்தை மனிதருக்குப் பொருத்திய டாக்டர்கள் .. - வெற்றியில் முடிந்த வினோத ஆப்பரேஷன்..!

பேட்டிங் ஜாம்பவான்

கடந்த 2007 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் துவங்கிய டெய்லர், இதுவரையில் டெஸ்ட் போட்டிகளில் 7,684 ரன்களை எடுத்துள்ளார். இதில் 19 சதங்களும் 35 அரை சதங்களும் அடக்கம். கடந்தாண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் தொடர் சேம்பியன்ஷிப்பில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணியில் இவரும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விட்டதைப் பிடித்த நியூசிலாந்து

வங்க தேசம் உடனான தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் நியூலாந்து அணி தோல்வியடையந்தது. இந்நிலையில் ஹேக்லி ஓவல் மைதானத்தில் ஜனவரி 9 ஆம் தேதி  இரண்டாவது டெஸ்ட் மேட்ச் துவங்கியது. டாஸை  வென்ற வங்கதேசம் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து நியூசிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்ய வந்தனர். அபாரமாக ஆடிய  டாம் லேதம்  இரட்டை சதம் விளாசினார். மற்றொரு வீரரான கான்வே சதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். இறுதியில் 6 விக்கெட் இழப்பிற்கு 521 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக நியூசிலாந்து கேப்டன் லேதம் அறிவித்தார்.

கடைசிப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஸ் டெய்லர் 28 ரன்களுக்கு  ஆட்டமிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

பொங்கல் முடிஞ்சு சொந்த ஊர்ல இருந்து சென்னை வர திட்டமிடுறீங்களா?... உங்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சுருண்ட வங்கதேசம்

அதன்பின்னர் பேட்டிங் செய்ய வந்த வங்கதேச வீரர்கள், அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்ப அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்து 126 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் வங்கதேசம் மீண்டும் பேட்டிங் செய்யும் நிலைமை உருவானது. இரண்டாவது இன்னிங்சிலும் வங்க தேச வீரர்கள் சொதப்பவே 278 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது வங்கதேச அணி. இதனால் இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது நியூசிலாந்து.

அபாரமாக ஆடி இரட்டை சதம் விளாசிய டாம் லேதம் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகன் விருது டிவோன் கான்வே -க்கு அளிக்கப்பட்டது.

ROSS TAYLOR, NEW ZEALAND, BANGLADESH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்