"ப்பா, என்ன 'effort'ங்க இது.." மின்னல் வேகத்தில் பரந்த 'ரோஹித்'.. அடுத்த நொடியே நடந்த வேற 'லெவல்' சம்பவம்!!.. 'வைரல்' வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான இரண்டாவது போட்டியில், 337 ரன்கள் என்ற கடினமான இலக்கை, மிக எளிதாக எட்டிப் பிடித்து, இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே, சிறப்பாக ஆடி ரன் குவித்து வந்த நிலையில், தொடக்க வீரர் ஜேசன் ராய் விக்கெட்டை மிக அருமையாக காலி செய்தார் ஹிட்மேன் ரோஹித் ஷர்மா (Rohit Sharma). குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) வீசிய 17 ஆவது ஓவரில், பேர்ஸ்டோ (Bairstow) பந்தை எதிர்கொண்டார்.

அப்போது, பந்தை மிட் விக்கெட் திசையில் அடித்த பேர்ஸ்டோ, உடனடியாக ரன் ஓட நினைத்தார். மறுபுறம் நின்ற ஜேசன் ராயும் ஓட முயற்சிக்க, அங்கு ஃபீல்டிங் நின்று கொண்டிருந்த ரோஹித் ஷர்மா, டைவ் அடித்து, மிக வேகமாக பந்தினை பிடித்தார். இதனைக் கண்டதும், பேட்ஸ்மேன்கள் இருவரும் குழம்பிப் போன நிலையில், வேகமாக ஓட எண்ணினர்.

 

ஆனால், அதற்குள் பந்தை பிடித்த ரோஹித் ஷர்மா, வேகமாக கீப்பர் ரிஷப் பண்ட்டிடம் வீசினர். அந்த சமயத்தில், ஜேசன் ராய் கிரீஸுக்குள் சென்று சேரவில்லை. இதனால், ஜேசன் ராய் 55 ரன்களில் அவுட்டாகி நடையைக் கட்டினார்.



இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்க சிரமப்பட்ட சமயத்தில், தனது அசத்தல் சாமர்த்தியத்தால், ரோஹித் செய்த ரன் அவுட் தொடர்பான வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்