'மத்த டீம்ல Familyகே அனுமதி இல்லாதப்போ'... 'BCCIஐ மிரள செய்த அணி!!!'... 'லிஸ்ட்டுலயே இதுதான் உச்சகட்டம்!!!'... 'தொடருக்குப்பின் கசிந்த தகவல்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
இந்தாண்டு ஐபிஎல் தொடர் வெளிநாட்டில் நடத்தப்பட்டதால் அனைத்து அணிகளும் குறைந்த அளவில் வீரர்கள் மற்றும் குழுவினரை உடன் அழைத்துச் சென்ற நிலையில், ஒரு ஐபிஎல் அணி மட்டும் பெரிய கூட்டத்தையே அழைத்துச் சென்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு நடுவே 2020 ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டதால் பிசிசிஐ பல கட்டுப்பாடுகளை விதித்து, ஒவ்வொரு அணிக்கும் தனி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
பிசிசிஐயின் கட்டுப்பாடுகளால் ஐபிஎல் அணிகள் தங்கள் வீரர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்கள் என அனைவரையும் ஒரே பாதுகாப்பு வளையத்தில் வைத்து பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால் ஐபிஎல் அணிகள் பெரும்பாலும் 40க்கும் மேற்பட்டவர்களையும், சில அணிகள் 60, 70 வரையிலான எண்ணிக்கையில் வீரர்கள் மற்றும் குழுக்களை அழைத்து சென்றுள்ளது. ஆனால் மும்பை அணி ஒன்று மட்டும் 150 பேரை அழைத்து வந்து பிசிசிஐ அதிகாரிகளை மிரள வைத்ததாக கூறப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட சில அணிகளில் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல கூட அனுமதி அளிக்கப்படாத நிலையில், மும்பை அணி மட்டும் தங்கள் வீரர்களுடன் அவர்களின் குடும்பத்தினரையும் அழைத்துச் சென்றுள்ளது. அதோடு நிற்காமல் அந்த அணி வீரர்களின் குடும்பத்தினரையும் தாண்டி உதவியாளர்கள் எனப் பலரும் உடன் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அதிலும் டெய்லர், மேக்கப் மேன், ஹேர் ஸ்டைலிஸ்ட் என சிலருடைய பெயர்கள் லிஸ்ட்டில் இருந்ததை பார்த்து பிசிசிஐ அதிகாரிகளே அதிர்ந்து போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் ஐபிஎல் அணிகள் எத்தனை பேரை உடன் அழைத்து வரலாம் என பிசிசிஐ முன்னதாக குறிப்பிட்டு எதுவும் கூறாததால் மும்பை இந்தியன்ஸ் அணியை அதனால் எதுவும் சொல்ல முடியாமல் போயுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் சென்ற ஐபிஎல் அணிகளில் ஆறு ஐபிஎல் அணிகள் துபாயில் தங்கிய நிலையில், மும்பை, கொல்கத்தா அணிகள் மட்டும் அபுதாபியிலும், ராஜஸ்தான் அணி ஷார்ஜாவிலும் தங்கியிருந்தது. இதுபோல நிறைய பேர் இருந்ததாலேயே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக அணிகள் இருக்கும் துபாயை விடுத்து, அபுதாபியில் இடம் அளிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும் அதிக பேர் இருந்தபோதும் மும்பை அணி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் மற்ற அணிகளை விட சிறப்பாக செயல்பட்டு அசத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறிய அளவிலான குழுவாக இருந்தும் அதில் 13 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டபோதும், மும்பை இந்தியன்ஸ் அணி 150 பேருக்கும் மேல் அழைத்துச் சென்று பாதுகாப்பாக தொடரை முடித்து திரும்பியுள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றபோது, தங்கள் அணி தங்களை நன்றாக பார்த்துக் கொண்டது எனவும், சிறப்பாக வசதிகள் செய்து கொடுத்தது எனவும் மும்பை வீரர்கள் கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அப்போ 'அது' கன்ஃபார்ம் தானா...? 'போடுறா வெடிய...' - 'வேற லெவல்' கொண்டாட்டத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்...!
- "இனிமே 'மேட்ச்' நடக்குறப்போ 'அந்த' விஷயத்த பண்ணமாட்டேன்... எனக்கு தான் வயசாயிடுச்சுல்ல ... " அட நம்ம 'வார்னரா' இப்டி சொன்னது?!!!.."
- 'இதுக்கெல்லாம் பின்னாடி இத்தன பிளானிங்கா?!!'... 'கங்குலி எடுத்த அந்த ஒரு முடிவு!!!'... 'அடுத்தடுத்த அதிரடிகளால் வருமானத்தை குவித்து மலைக்க வைத்துள்ள BCCI!!!'...
- ‘இரண்டு சீனியர் வீரர்களும்’... ‘டெஸ்ட் தொடரில் பங்கேற்க போவதில்லை?’... ‘வெளியான தகவல்’...!!!
- யார் சிறந்த 'கேப்டன்'??... கோலி - ரோஹித் விவகாரத்தில்... மேலும் 'பரபரப்பை' ஏற்படுத்திய கம்பீரின் 'பேச்சு'!!!
- ‘இந்திய அணி நிர்வாகம்’... ‘எந்த ஆர்டரில் இறக்கினாலும் சரி’... ‘பேட்டிங் செய்ய தயார்’... ‘அதிரடியாக கூறிய சீனியர் வீரர்’...!!!
- ‘அவருக்கு ஏன் இந்திய அணியில் இடம் கொடுக்கல’... ‘கண்டிப்பா அவர சேர்த்து இருக்கணும்’... ‘மும்பை இந்தியன்ஸ் வீரருக்கு’... ‘கிரிக்கெட் ஜாம்பவான் ஆதரவு’
- இன்னும் 5 நாள்தான்.. ரோஹித் மட்டுமில்ல அவரும்தான்.. ‘செக்’ வைத்த ரவிசாஸ்திரி..!
- ‘இப்டி யாராவது செய்வாங்களா?’... ‘தமிழக வீரர் செய்தது’... ‘எனக்கு ஏமாற்றமா இருந்துச்சு’... ‘முன்னாள் வீரர் விமர்சனம்’...!!!
- "இது தரமான பதிலடி..." ரோஹித்தை 'கிண்டல்' செய்த பிராட் ஹாகை... ஒரே ஒரு 'மீம்' வைத்தே செஞ்சு விட்ட இந்திய முன்னாள் 'வீரர்'!!!