அட.. கோலியை அழகா வெட்கப்பட வெச்சுட்டாருப்பா ரோஹித்.. அதுக்கு அப்றம் நடந்ததுதான் செம்ம!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகள் விளையாடி சாதனை மைல்கல்லை எட்டியுள்ளார்.

Advertising
>
Advertising

கோலியின் மைல்கல்:

இன்று உலகில் கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 என அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி 50 ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே நபர் இந்தியாவின் விராட் கோலி மட்டுமே. எண்ணற்ற சாதனைகளைப் படைத்துள்ள இப்போது இலங்கைக்கு எதிராக நடந்துவரும் போட்டியில் விளையாடுவதன் மூலமாக டெஸ்ட் போட்டிகளில் 100 போட்டிகள் விளையாடிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

சாதனைக்கு அளிக்கப்பட்ட கௌரவம்:

கோலியின் இந்த சாதனையைக் கௌரவப்படுத்தும் விதமாக போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் விராட் கோலியை கவுரப்படுத்தியது. சக வீரர்கள் சூழ்ந்து நிற்க மனைவி அனுஷ்கா சர்மாவுடன் களத்திற்கு வந்தார் விராட் கோலி. இதன் பிறகு பயிற்சியாளர் டிராவிட், 100-வது டெஸ்ட் மைல்கல்லைக் குறிக்கும் வகையில் நினைவு சின்னத்தையும், தொப்பியையும் வழங்கினார்.கௌரவத்தைப் பெற்றுக்கொண்ட அவர் உணர்ச்சிகரமான நிலையில் ‘இது எனக்கு ஒரு விசேஷமான தருணம். என் மனைவி இங்கே இருக்கிறார், என் சகோதரனும் இங்கே இருக்கிறார் . எல்லோரும் மிகவும் பெருமைப்படுகிறார்கள். நீங்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை. பிசிசிஐ-க்கும் சக வீரர்களுக்கும் நன்றி' என்று கூறினார்.

பேட்டிங்கில் மைல்கல்:

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. பேட்டிங்கில் களமிறங்கிய அவர் 45 ரன்கள் சேர்த்து அவுட்டானார். கோலி  38 ரன்கள் எடுத்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்தார். இந்த மைல்கல்லை கட்டும் 6 ஆவது இந்திய பேட்ஸ்மேன் கோலி ஆவார். கோலிக்கு முன்னதாக இந்த மைல்கல்லை சச்சின், கவாஸ்கர், டிராவிட், லக்‌ஷ்மன், சேவாக் ஆகிய ஐந்து பேர் கடந்துள்ளனர். இவர்களோடு ஆறாவது இந்திய வீரராக கோலி இணைந்துள்ளார். இந்திய அணி முதல் இன்னிங்கில் 574 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

ரோஹித் ஷர்மா செய்த காரியம்:

இதையடுத்து நேற்று மாலை இந்திய அணி பீல்ட் செய்ய வந்தபோது கோலியும் வீரர்களோடு மைதானத்தில் நுழைந்தார். அப்போது இந்திய அணியின் புதுக்கேப்டன் ரோஹித் ஷர்மா கோலியை மட்டும் பெவிலியன் நோக்கி செல்லுமாறு கூறினார். விராட் கோலி தயங்கவே ரிஷப் பண்ட் உள்ளிட்டவர்களும் அவரை செல்ல வற்புறுத்தினர். அவர் சென்றதும் வீரர்கள் இருபுறமும் பாதுகாவலர்கள் போல நின்று கோலியை வர சொல்லி அவருக்கு மரியாதை செலுத்தினர். போரில் தளபதி அல்லது அரசன் போன்றவர்களுக்கு இந்த மரியாதையை வீரர்கள் வழங்குவார்கள். வீரர்கள் இப்படி செய்ததும் கோலி வெட்கத்தில் சிரித்துக் கொண்டே கையை உயர்த்தி தலையை தாழ்த்தி அவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் இந்த மரியாதைக்காக கேப்டன் ரோஹித் ஷர்மாவை கட்டுப்பிடித்து நன்றியை வெளிப்படுத்தினார். இந்த காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

VIRATKOHLI, VIRAT KOHLI, ROHITH SHARMA, TEAM INDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்