”எல்லோருக்கும் இப்படி ஒரு காலம் வரும்.. ஆனா”… ஐபிஎல் மோசமான சாதனை… Emotion ஆன ரோஹித் ஷர்மா!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் படுபாதாளத்தில் உள்ளது. இதுவரை ஒரு போட்டிக் கூட வெல்ல முடியாமல் போராடி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | ஒத்த நம்பர் பிளேட்டுக்கு இவ்வளவு கோடியா.. மிரள வைத்த துபாய் ஏலம்..!

மோசமான சாதனை…

ஐபிஎல் 2022ல் மும்பை இந்தியன்ஸ்  அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. மும்பை அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு (எல்எஸ்ஜி) எதிராக வான்கடே மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 24) நடந்த  போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்த சீசனின் 8 போட்டிகளிலும் தோற்றுள்ளது. இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இதுபோன்ற தொடர் தோல்வியை எந்த அணியும் சந்தித்தது இல்லை.

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆதிக்கம்…

ஐபிஎல் தொடரில் அதிகமுறை கோப்பையை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. 2013 ஆம் ஆண்டு ரோஹித் ஷர்மா தலைமையில் முதல் கோப்பையை வென்றது. பின்னர் 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல் தொடரின் வலிமையான அணிகளில் ஒன்றாக இருந்த மும்பை இந்தியன்ஸ், இந்த ஆண்டு மெஹா ஏலத்தில் பல வீரர்களை மாற்றியது. இந்நிலையில் இந்த சீசனில் மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது.

ப்ளே ஆஃப் வாய்ப்பு…

தொடர்ந்து 8 போட்டிகளை தோற்றுவிட்டதால் இந்த ஆண்டு ப்ளே ஆஃப்க்கு செல்ல முடியாத முதல் அணியாக வெளியேறியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இது ஐபிஎல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. அடுத்த ஆண்டு மீண்டும் பலத்தோடு திரும்பி வரவேண்டும் என்று  சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

ரோஹித் ஷர்மா உருக்கம்…

இந்த தோல்விகள் குறித்து மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா “நாங்கள் எங்களுடைய சிறந்ததை இந்த ஆண்டு கொடுக்கவில்லை.ஆனால் இதுபோன்ற தடைகள் எல்லா கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கும் நடப்பதே. ஆனால் நான் என் அணியையும் இந்த சூழலையும் நேசிக்கிறேன்.அதுபோலவே எங்கள் நலம் விரும்பிகளையும் பாராட்டுகிறேன். எங்களின் இக்கட்டான நேரத்தில் எங்கள் மீது நம்பிக்கையும் ஆதரவும் தந்ததற்காக” என்று உருக்கமாக கூறியுள்ளார். ரோஹித் ஷர்மா சமீபத்தில்தான் இந்திய அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளிலும் தலைமை பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CRICKET, ROHIT SHARMA, ROHITH SHARMA EMOTIONAL STATEMENT ON IPL, IPL 2022, ஐபிஎல், ரோஹித் ஷர்மா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்