ரோகித் இதை கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருக்கலாமே.. கோலி உடனான மோதல் சர்ச்சை.. முன்னாள் வீரர் சொன்ன பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விராட் கோலி குறித்து ரோஹித் ஷர்மா அளித்த பதிலுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

அதெப்படி மிதாலியை பார்த்து அப்படி சொல்லலாம்.. கொதித்த இந்திய வீராங்கனை.. இங்கிலாந்து கமெண்ட்டேட்டருடன் வெடித்த வார்த்தை போர்..!

கிரிக்கெட்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதனை அடுத்து இரு அணிகளும் டி20 போட்டிகள் மோதவுள்ளன. இதன் முதல் போட்டி இன்று (16.02.2022) அணிக்கெதிராக டி20 கிரிக்கெட் கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது.

ரோகித் சர்மா

இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது விராட் கோலி தொடர்ந்து ஃபார்ம் இன்றி தவித்து வருவது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், ‘உங்களை போன்ற நபர்கள் அமைதியாக இருந்தால், அவர் நன்றாக இருப்பார் என நினைக்கிறேன்’ என கோலிக்கு ஆதரவாக பதிலளித்தார்.

அதுல் வாசன்

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான அதுல் வாசன் (Atul Wassan) கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘இந்திய அணியில் விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையே கருத்து மோதல் இருப்பதாக வதந்திகள் பரவி வருகிறது. அதனால் கோலிக்கு ஆதரவான கருத்தை ரோகித் முன்னரே சொல்லியிருக்க வேண்டும். ஒவ்வொரு வீரருக்கும் சில சிக்கல்கள் உள்ளன என்று நான் நினைக்கிறேன். வேறு யாராவது கேப்டனாக இருக்கும்போது அவர்கள் குறைவாக செயல்படுகிறார்கள் என்று கருதிவிட கூடாது’ என அதுல் வாசன் கூறியுள்ளார்.

கபில்தேவ்-சுனில் கவாஸ்கர்

தொடர்ந்து பேசிய அவர், ‘கடந்த காலங்களில் பிஷன் சிங் பேடி-சுனில் கவாஸ்கர் இடையேயும், கபில்தேவ்-சுனில் கவாஸ்கர் இடையேயும் கருத்து மோதல் இருந்தது. ஆனால் அவர்கள் ஒரு குடும்பம் போல் வாழ்ந்தனர் என்று நான் கருதுகிறேன். சில நெருக்கங்கள் அவமதிப்பை வளர்க்கின்றன, அது மிகவும் உண்மை. எதுவேண்டுமானாலும் நடக்கலாம், ஆனால் அது அணியின் மன உறுதியைக் குலைத்துவிடக் கூடாது. தற்போது ரோகித் சரியாக செயல்பட்டுள்ளார்’ என அதுல் வாசன் கூறியுள்ளார்.

‘என்ன அம்மா வீடு திறந்து கிடக்கு’.. உள்ளே சென்று பார்த்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சென்னையில் நடந்த ஷாக்..!

ROHIT SHARMA, VIRAT KOHLI, ATUL WASSAN, FORMER INDIA CRICKETER, CAPTAIN ROHIT SHARMA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்