சர்ச்சையில் முடிந்த ரோஹித் ஷர்மா விக்கெட்..! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஷர்மாவின் விக்கெட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 72 ரன்களும், விக்கெட் கீப்பர் தோனி 56 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடி வருகிறது. இதில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்தில் இருந்தே திணறி வருகிறது.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவின் விக்கெட் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் மேற்கிந்திய பந்துவீச்சாளர் ரோச் வீசிய 6 -வது ஓவரில் ரோஹித் ஷர்மா விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். இதனால் மேற்கிந்த தீவுகள் அணி அம்பயரிடம் அவுட் கேட்டனர். ஆனால் அம்பயர் இதனை அவுட் இல்லை என மறுத்துவிட்டார். இதனை அடுத்து மேற்கிந்த தீவுகள் அணி கேப்டன் ஜசன் ஹோல்டர்  ரீ-வியூ கேட்டார். அதில் பந்து பேட்டில் பட்டு செல்வது போல் இருந்ததால் தேர்ட் அம்பயர் அவுட் என அறிவித்தார். இப்போட்டியில் ரோகித் ஷர்மா 18 ரன்களில் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

ICCWORLDCUP2019, INDVWI, TEAMINDIA, ROHITSHARMA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்