இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. சிரிச்சிக்கிட்டே ரோஹித் சொன்ன வார்த்தை.. எகிறும் எதிர்பார்ப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் ஏலம் குறித்து சஹாலிடம் ரோகித் சர்மா மறைமுகமாக கூறிய வார்த்தை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

VIDEO: யாருங்க சொன்னது ரெண்டு பேருக்கும் சண்டைன்னு.. இந்த வீடியோ பாருங்க தெரியும்..!

முதல் ஒருநாள் போட்டி

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் ஜேசன் ஹோல்டர் 57 ரன்கள் எடுத்தார். இந்திய அணியை பொறுத்தவரை சஹால் 4 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், பிரஷித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்தியா வெற்றி

இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 28 ஓவர்கள் முடிவில் 178 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 60 ரன்கள் எடுத்தார்.

ஆட்டநாயகன் சஹால்

இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற சுழற்பந்து வீச்சாளர் சஹால் முக்கிய காரணமாக அமைந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் பொல்லார்ட்டை முதல் பந்திலேயே போல்டாகி அசத்தினார். சிறப்பாக பந்துவீசிய சஹாலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

ஐபிஎல் சிக்னல்

போட்டி முடிந்த பின் கேப்டன் ரோகித் சர்மாவை சஹால் பேட்டி கண்டார். அப்போது பேசிய ரோகித் சர்மா, ‘ஐபிஎல் ஏலம் வரப்போகிறது, வாழ்த்துக்கள்’ என சிரித்துக்கொண்டே கூறினார். உடனே சஹாலும் சத்தமாக சிரித்தார்.

மெகா ஐபிஎல் ஏலம்

இந்த மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் ஐபிஎல் ஏலம் நடைபெறுகிறது. ஏற்கனவே ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் ஏற்கனவே விளையாடிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளது. இதில் பெங்களூரு அணியின் சார்பாக விளையாடிய சஹாலை அந்த அணி விடுவித்தது. அதனால் அவர் ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

மும்பை இந்தியன்ஸ்

இந்த சூழலில் ஏலம் குறித்து சஹாலிடம் மறைமுகமாக ரோகித் சர்மா கூறியுள்ளார். அதனால் அவர் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIDEO: பாவங்க மனுசன்.. இப்டி ‘அவுட்’ ஆவோம்னு கொஞ்சம் கூட நெனச்சிருக்க மாட்டாரு.. சோகமாக வெளியேறிய ரிஷப் பந்த்..!

ROHIT SHARMA, CHAHAL, IPL, IPL MEGA AUCTION, YUZVENDRA CHAHAL, BCCI, ஐபிஎல், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்