"ஒரே ஓவர்ல இப்டி எல்லாம் நடக்குமா?".. 2 பந்திலும் தப்பித்த ரோஹித்.. "ஆனாலும் ஆஸ்திரேலியா டீம் கோட்டை விட்டுட்டாங்களே!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | அசாமில் கிடந்த தமிழ்நாட்டு பெண் உடல்.. சாமி டாலர் கொடுத்த முக்கிய Clue.. ராணுவ அதிகாரி சிக்கியது எப்படி?

நீண்ட இடைவெளிக்கு பிறகு மூன்றாவது போட்டி ஆரம்பமாகியுள்ள சூழலில், இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது.

முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி இந்திய அணியில் கே.எல்.ராகுல் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இந்த போட்டியில் இடம்பெறாத சூழலில் அவர்களுக்கு பதிலாக சுப்மன் கில் மற்றும் உமேஷ் யாதவ் இடம்பெற்றனர். அதேபோல ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் விலகியுள்ள சூழலில் அவர்களுக்கு பதிலாக கேமரூன் க்ரீன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.

முதல் இரண்டு போட்டிகளையும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த சூழலில் இன்னும் ஒரு போட்டியை வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி முன்னேற முடியும் என்ற சூழலும் உள்ளது.

அப்படி ஒரு சூழலில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளை இழந்தும் தடுமாறி வருகிறது. 60 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இந்திய அணி இழந்த சூழலில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், 3 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரில் நடந்த சம்பவம் தொடர்பான செய்தி தான் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா 12 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டம்பிங் முறையில் அவுட்டாகி இருந்தார். ஆனால் போட்டியின் முதல் ஓவரிலேயே ரோஹித்திற்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்திருந்தது. ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் முதல் பந்து, ரோஹித் பேட்டில் பட்டு கீப்பர் அலெக்ஸ் கேரியில் கைக்கு சென்றிருந்தது. இதற்கு நடுவரிடம் ஆஸ்திரேலிய வீரர்கள் அப்பீல் செய்ய, அவர் அவுட் கொடுக்கவில்லை என தெரிகிறது. தொடர்ந்து, ஆஸ்திரேலிய வீரர்களும் டிஆர்எஸ் முறையில் அப்பீல் செய்யவில்லை என தெரிகிறது. ஆனால், ரீப்ளேவில் ரோஹித் பேட்டில் பந்து பட்டதும் தெரிய வந்தது.

இதே ஓவரில், மூன்று பந்துகள் கழித்து மீண்டும் ரோஹித்திற்கு எல்பிடபுள்யூ முறையில் அவுட் அப்பீல் செய்தனர் ஆஸ்திரேலிய வீரர்கள். ஆனால், நடுவர் அவுட் கொடுக்காத சூழலில், டிஆர்எஸ் அப்பீலுக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் செல்லவில்லை. ஆனால், டிவி ரீப்ளேயில் அதுவும் அவுட் என தெரிய வந்தது. இப்படி முதல் ஓவரிலேயே ரோஹித்திற்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தது தொடர்பான விஷயம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.

Also Read | "ஒவ்வொரு நாளும் இதை மறந்துடாதீங்க".. தனது உடல்நிலை குறித்து ரிஷப் பண்ட் உருக்கம்..!

CRICKET, ROHIT SHARMA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்