‘தீராத குழப்பம்’... ‘அவர ஏன் இந்திய அணியில் சேர்க்கல???’... ‘காட்டமாக பதில் கூறிய கங்குலி’... ‘சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா சேர்க்கப்பட்டிருந்தாலும்,  ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்படாதது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது, ரோகித் சர்மாவிற்கு பெயர் இல்லாததும், கே.எல். ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதும் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

கோலியின் சதியால் தான் ரோகித் சர்மா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்ற அளவிற்கு ரசிகர்கள் பலர் கடும் காட்டமாகவே விமர்சித்து வந்தனர். இதன் காரணமாகவும், விராத் கோலி முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இந்தியா திரும்ப வேண்டியுள்ளதாலும் ரோகித் சர்மா டெஸ்ட் தொடருக்கான அணியில் மட்டும் கடந்த சில தினங்களுக்கு முன் தேர்வு செய்யப்பட்டார்.

இருந்தாலும் ரோகித் சர்மா நீக்கம் குறித்தான சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. மேலும் காயம் காரணமாக அணியில் சேர்க்கப்படாததால், விருதிமான் சாஹா, வருண் சக்ரவர்த்தி குறித்தும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், ரோகித் சர்மா நீக்கம் குறித்தான அனைத்து கேள்விகளுக்கும் பிசிசிஐ தலைவரான கங்குலி கடும் காட்டமாகவே பதிலளித்துள்ளார். இது குறித்து கங்குலி பேசுகையில், ‘வீரர்களின் காயம் குறித்த விவரங்கள் பிசிசிஐக்கும், பிசியோவுக்கும், என்.சி.ஏ.வுக்கும் மட்டுமே தெரியும்.

பிசிசிஐ எப்படி இயங்குகிறது என யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. காயம் குறித்த எந்த புரிதலும் இல்லாமல் பேசி வருகின்றனர். ஐபிஎல் தொடரின்போது இந்திய பிசியோ மற்றும் பயிற்சியாளர்கள் துபாயில் தான் தங்கியிருந்தனர். சாஹா டெஸ்ட் தொடரில் தான் விளையாட உள்ளார். அதற்குள் அவர் முழு உடற்தகுதி பெற்றுவிடுவார்’ என்றார்.

மேலும் பேசிய கங்குலி, 'ரோகித் சர்மா முழுமையான உடற்தகுதியுடன் இல்லை, 70 சதவீதம் மட்டுமே பிட்டாக உள்ளார். இதன் காரணமாகவே ரோகித் சர்மாவுக்கு ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை’ என்று தெரிவித்தார். மேலும், ஆஸ்திரேலிய செல்லும் இந்திய அணியுடன் ரோகித் செல்லாமல், பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் சிகிச்சை பெற்று உடற்தகுதி பெற்றவுடன், டிசம்பர் 17-ல் தொடங்கும் அடிலெய்ட் டெஸ்ட் போட்டிக்குள் ஆஸ்திரேலியா செல்வார் என்று கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்